Team India: இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி இந்த 5 பேரில் யாருக்கு?

விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் கேப்டனாக வரக்கூடிய முதல் 5 போட்டியாளர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2022, 06:27 AM IST
  • விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி யாருக்கு?
  • ரோஹித் ஷர்மா டெஸ்ட் கேப்டன்சியை சமாளிப்பாரா?
  • ரிஷப் பந்த், சின்னத் தலையாக மாறுவாரா?
Team India: இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி இந்த 5 பேரில் யாருக்கு?   title=

புதுடெல்லி: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஜனவரி 15 அன்று ராஜினாமா செய்தார். காலியாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக, இந்த ஐவரில் ஒருவரே மகுடம் சூடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.  

ரோஹித் சர்மா?
ரோஹித் அடுத்த டெஸ்ட் கேப்டனாவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அவர் இன்னும் டெஸ்டில் அச்சுறுத்தும் சக்தியாக இல்லை என்ற வாதங்கள் இருந்தாலும்,  2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக பதவி உயர்வு பெற்ற அவரது திறமை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

2021 இல் இந்தியாவின் அதிக ரன் குவித்த பேட்டராக இருந்தார். WTC இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் ரோஹித் ஷர்மா.

ரோஹித் ஏற்கனவே ஒயிட் பால் கேப்டனாக உள்ளார். எனவே, டெஸ்ட் கேப்டனுக்கான பரிசீலனையில் ரோஹித் முதல் போட்டியாளராக இருக்கிறார். ஒரு கேப்டனாக அனைத்து வடிவங்களிலும் பொருந்துவதற்கு ஏற்றவர் என்றாலும், அவரது தொடர் காயங்கள் மட்டுமே அவருக்கு ஒற்றைத் தடையாக இருக்கிறது.  

ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்

ஜஸ்பிரித் பும்ரா?
மற்றொரு சுவாரஸ்யமான டெஸ்ட் கேப்டன் தெரிவு ஜஸ்பிரித் பும்ரா. வேகப்பந்து வீச்சாளர், சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு தந்திரமான கிரிக்கெட்டர்.

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான ஓருநாள் போட்டிகளிலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும், கோஹ்லி இல்லாதபோது கே.எல்.ராகுலுக்கு துணை கேப்டனாக இருந்தார்.

பும்ரா ஏற்கனவே தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார், பந்து வீச்சாளர்கள் நிச்சயமாக ஒரு நல்ல கேப்டனாக இருக்க முடியும் என்றாலும், பும்ரா இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பும்ராவுக்கு கேப்டன் பதவி கொடுத்தால், அவரது பணிச்சுமை அதிகரிக்கும், அது அவரது ஆட்டத்தில் எதிரொலிக்கலாம் என்ற விஷயம் மட்டுமே பும்ராவுக்கு ஒரேயொரு தடையாக இருக்கலாம்.

sports

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் தற்போது இந்திய டெஸ்ட் கேப்டன் போட்டிகளுக்கான கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மிகவும் இளைய கேட்பனாக இருப்பார். 

24 வயதேயான துடிப்பான இளைஞர் என்ற வகையில் டெஸ்ட் கேப்டனாக பந்த் ஒரு அற்புதமான தேர்வு. விக்கெட் கீப்பர்-பேட்டரின் அனுபவக் குறைவே அவருக்கு இருக்கும் குறை. இருந்தபோதிலும், சுனில் கவாஸ்கர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்றோர் பந்த் கேப்டன் ஆவதற்கு ஆதரவளித்துள்ளனர். 

பந்த் ஐபில் போட்டிகளில் டெல்லி அணியை வழிநடத்தியுள்ளார், மேலும் அவர் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருந்தாலும், ரிஸ்க் எடுப்பது என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல இயல்பாக வருகிறது.

அவரது வழக்கத்திற்கு மாறான விளையாட்டு தந்திரங்கள் பலனளிப்பதால், மூத்த கிரிக்கெட் வீரர்கள் பந்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.  

28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பந்த், அனைத்து போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு தன்னை நிரூபித்துள்ளார். சிவப்பு-பந்து வடிவமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றியமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இந்திய அணியில் 10 மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 தலைகள்

கேஎல் ராகுல்?
ரோஹித் இல்லாத தென்னாப்பிரிக்கா தொடரின் போது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் துணை கேப்டனாக ராகுல் பணியாற்றினார். அவர் ஏற்கனவே வெள்ளை-பந்து வடிவங்களில் தனது திறமையை நிரூபித்திருப்பதால், டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வலுவான போட்டியாளராக உள்ளார் கே.எல் ராகுல்.

இருந்தபோதிலும், 29 வயதான அவர் கேப்டன்சியைப் பொறுத்தவரை நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

மீதமுள்ள இரண்டாவது WTC சுழற்சியில் இந்தியா தனது பெரும்பாலான ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாட உள்ள நிலையில், ராகுலுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்க தேர்வாளர்கள் விரும்புவார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

2021 இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர், சிவப்பு-பந்து வடிவத்தில் கே.எல் ராகுலுக்கு இடம் கொடுப்பது குறித்து ஒன்றுக்கு பலமுறை சிந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி: விரைவில் குணமடைவேன் என ட்வீட்

கோஹ்லிக்கு பின் ஆர் அஸ்வின் ?
தற்போது இந்திய கிரிக்கெட்டில் உள்ள புத்திசாலித்தனமான கிரிக்கெட் மனதில் அஸ்வின் ஒருவர். இந்த ஆஃப்-ஸ்பின்னர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது வெற்றிகரமான பந்துவீச்சாளர் (430). அஸ்வினுக்கு தற்போது கேப்டனாக வாய்ப்பு கொடுத்தாலும், கொடுக்கப்படாவிட்டாலும், அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமான போட்டியாளர் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒருவேளை இந்த முறை அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், ஓரிரு வருடங்களில் அந்த இடம் அவருக்கு நிச்சயமாக கிடைத்துவிடும்.  

ஏனென்றால், தற்போதைய நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு போட்டிகளில் அஸ்வினனுக்கு உறுதியான இடம் கிடைக்கவில்லை. மேலும், ஸ்பின்-பவுலிங் ஆல்-ரவுண்டர் அடிக்கடி காயத்தால் காயப்படுவது அவரின் கேப்டன்சி பதவிக்கு தடைக்கல்லாக இருக்கிறது.  

ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News