கிரிக்கெட் விளையாட்டு மீது மக்களுக்கு இருக்கும் மோகம், பிற விளையாட்டுகளின் மீது இல்லை என்பது ஒரு ஆதங்கமாக அல்ல, குற்றச்சாட்டாகவே பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் நடுவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (ஏப்ரல் 2, 2023 ஞாயிற்றுக்கிழமை) அன்று, ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் போலீஸ் எல்லைக்குட்பட்ட மகிசலந்தா கிராமத்தில் கிரிக்கெட் போட்டியின் தவறான முடிவெடுத்த விவகாரத்தில் அம்பயர் மீது கத்தி வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.


அம்பயருக்கு கத்திக் குத்து


கத்தி குத்துபட்ட அம்பயர், மன்ஹிசலந்த கிராமத்தைச் சேர்ந்த லக்கி ரௌட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?


மன்ஹிசலந்தா கிராமத்தில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று சங்கர்பூர் மற்றும் பிரம்மபூர் கிராமங்களுக்கு இடையேயான போட்டி நடந்து கொண்டிருந்தது. போட்டியின் போது, போட்டியில் இரு நடுவர்களில் ஒருவரான லக்கியின் தவறான முடிவால் இரு அணிகளும் வாய் தகராறில் ஈடுபட்டன.


மேலும் படிக்க: IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகம்... மேகக்கூட்டங்களுடன் வருகிறாரா வருணபகவான்?


உள்ளூர் கிரிக்கெட் போட்டி


தலிஜோடா பிரம்மாபூர் கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரஞ்சன் ரௌத் என்ற முனா என்ற இளைஞர் போட்டியின் அம்பயரை கத்தியால் தாக்கிய காட்சி அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கத்தியால் மட்டுமல்ல, கிரிக்கெட் மட்டையாலும் நடுவர் லக்கி தாக்கப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கத்திக் குத்து சம்பவம், ஒரு உயிரை பறித்தது.


விளையாட்டு விபரீதமானது


காயமடைந்த அம்பயரை அங்கிருந்த மக்கள் மீட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அம்பயர் லக்கியின் உயிர் பிரிந்தது.


மேலும் படிக்க | IPL 2023: அடேங்கப்பா! 14 வருட சாதனை... ஒரே போட்டியில் முறிடியத்த ராஜஸ்தான் - என்ன தெரியுமா?


"போட்டியின் போது, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த லக்கி என்ற இளைஞரை பிரம்மபூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கத்தி மற்றும் மட்டையால் தாக்கியதை நாங்கள் அறிந்தோம்" என்று உள்ளூர்வாசியான ஜஷோபந்தா ரௌட் கூறினார்.


தலைமறைவான முன்கோபக்காரர்


அம்பயரை தாக்கிய இளைஞர், முன்கோபத்தால் செய்த செயல், வினையாகிவிட்டது. அம்பயரை தாக்கிய சமுத்திரஞ்சன் ரௌத் என்ற முனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், கிராம மக்கள் அவரது நண்பரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


இந்த வழக்கில் நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். இறந்தவரை மட்டையால் தாக்கியவரையும் விசாரித்து வருவதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க: மெட்ரோ ஸ்டேஷனிலும் இனி ஐபிஎல் போட்டியை காணலாம்... சென்னை ரசிகர்களுக்கும் பல மாஸ் அப்டேட்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ