Chennai Metro CSK Match: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. மேலும், வரும் ஏப்.3ஆம் தேதி, சேப்பாக்கத்தில் இந்த தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன.
மேலும், ரசிகர்களும் போட்டியை காண பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கான டிக்கெட் விற்பனையும் முழுவதுமாக விற்றுத்தீர்த்துள்ளது. இந்நிலையில், மைதானத்தில் பார்க்க டிக்கெட் எடுத்த ரசிகர்களுக்கும், டிக்கெட் எடுக்காத ரசிகர்களுக்கும் சேர்த்து மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "ஐபிஎல் 16ஆவது சீசன் தற்போது நடைபெறும் சூழலில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகியவை இணைந்து ஏப்ரல்/மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களிலும் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொந்தரவு இல்லாத பயணத்தை வழங்க முடிவு செய்துள்ளன.
Press Release 01-04-2023 pic.twitter.com/9sr79WZGJj
— Chennai Metro Rail (@cmrlofficial) April 1, 2023
இலவச பயணம்
இந்த ஏற்பாட்டின் மூலம் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள், ஐபிஎல் போட்டிகளுக்கான தங்கள் க்யூஆர்/பார்கோடு போடப்பட்ட நுழைவுச்சீட்டுகளை, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கு இலவச ரயில் டிக்கெட்டாகப் பயன்படுத்த அனுமதிக்கும், அதாவது, போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் இருக்கும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து செல்லவும் இதனை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | IPL 2023: கோடி ரூபாய் வீரரால் கொல்கத்தா பரிதாபம்... பஞ்சாப் வெற்றி!
நேரம் நீட்டிப்பு
கூடுதலாக, சிஎம்ஆர்எல் அரசினர் தோட்ட மெட்ரோ நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு ஃபீடர் பஸ் சேவையையும் வழங்கும். இரவு போட்டி நடக்கும் நாட்களில், சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக சிஎம்ஆர்எல் கூடுதலாக ரயில் இயக்கத்தை 90 நிமிடங்கள் வரை நீட்டிக்கும்.
சிம்ஆர்எல் எப்போதும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவான போக்குவரத்து விருப்பங்களை சென்னை மக்களுக்கு வழங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வழங்கும் மேற்கூறிய வசதிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ ஸ்டேஷனில் ஐபிஎல்!
மேலும், வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்களில் உள்ள ராட்சத எல்.ஈ.டி திரைகளில் நேரடியாக திரையிட ஏற்பாடு செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் நலனுக்காக உட்கார வசதியுடன் கூடிய மெட்ரோ நிலையங்கள். போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் ஏதுமில்லை. சாதாரண மெட்ரோ பயணத்திற்கும், நிலையங்களில் ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் தங்குவதற்கும் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ