மொஹாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா தனது 16-வது ஒருநாள் சதத்தை அடித்தார். பின்னர் அச்சதமே ரோகித் சர்மா-வின் மூன்றாவது இரட்டை சதமாக உருமாறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது முதல் சதத்தினை அடைந்த தருணத்தில், தன் மனைவி ரிதிகாவிற்கு சிறப்பு பரிசாக தனது மகிழ்ச்சியின் வெளிபாடாக முத்தத்தினை பகிர்ந்துக்கொண்டார் நம் Mr.Perfect.


கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை, விராட் கோலி திருமணம் செய்து கொண்டார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியை தலைமை தாங்கும் பொறுப்பு ரோகித்தின் தலையில் விழுந்தது.



இத்தனை நெருக்கடிக்கடியில் அவர் தனது திறனை வெளிப்படுத்தி இன்றைய ஆட்டத்தினில் தனது மூன்றாவது இரட்டை சதத்தினை அடித்துள்ளார்.



முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தார், ஆனால் இன்று அவரது மனைவியின் ராசியால் இரட்டை சதங்களைக் கொண்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.