டி 20 உலகக் கோப்பையின் இரண்டாவது வார்ம் அப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்காக பந்துவீசுவதை காண முடிந்தது. இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். விராட் கோஹ்லி அல்ல. அவர் அணியில் சக வீரர்கள் போல களம் இறங்கினார். இந்த போட்டியின் போது, ​​விராட் ஏழாவது மற்றும் பதின்மூன்றாவது ஓவர்களை வீசினார். இரண்டு ஓவர்கள் வீசிய அவர் 12 ரன்கள் கொடுத்தார் மற்றும் விக்கெட் எடுக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, 2016-ல் டி 20 உலகக் கோப்பையின் போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 கிரிக்கெட்டில் விராட் கோலி இந்திய அணிக்காக பந்துவீசினார். பிப்ரவரி 2020 இல் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கோலி பந்து வீசினார். அதே நேரத்தில், விராட் கோலி கடைசியாக ஆகஸ்ட் 2017 இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பந்து வீசினார். அதற்கு அடுத்து இன்று தான் பந்து வீசினார்.


ஹர்திக் பாண்டியா தற்போது முழுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரால் பந்துவீச முடியவில்லை. அதனால் தான் விராட் கோலி பந்து வீசினார்.


கோஹ்லியின் பந்துவீச்சை பார்த்து சிரித்த ஸ்மித்:
ஸ்டீவ் ஸ்மித் கிரீஸில் இருந்தபோது, ​​விராட் கோலி பந்துவீச வந்தார். கோலியின் கையில் பந்தைப் பார்த்த ஸ்மித்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டி-20 போட்டிகளில் 12 இன்னிங்ஸில் பந்துவீசிய விராட் கோலி இதுவரை நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.


 



ALSO READ |  டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் யார்? கசிந்த தகவல்


ஆறாவது பந்து வீச்சாளர் யார்?
இன்றைய பயற்சி ஆட்டத்தில் டாஸ் போட்ட பிறகு ரோஹித் கூறுகையில், இந்தப் போட்டியில் ஆறாவது பந்துவீச்சு விருப்பத்தை நாங்கள் கண்டுபிடிப்போம். ஹர்திக் பாண்டியா இன்னும் பந்துவீசவில்லை. எங்களிடம் சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆறாவது பந்து வீச்சாளர் தேவை என்பதால், இன்றைய போட்டியில் சில முயற்சிகளை செய்வோம் எனக் கூறியிருந்தார்.


இந்திய அணியின் சிறப்பான ஆட்டம்:
இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 152/5 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. டி 20 உலகக் கோப்பையில் இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 


ALSO READ |  நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR