இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சாதனை நாயகனுமான விராட் கோலி இன்று தனது 30_வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாள் கொண்டாடத்தை ஹரித்வாரில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி கொண்டாடி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறார். டெஸ்ட் போட்டியை பொருத்த வரை அவர், 73 போட்டிகளில் விளையாடி 6331 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 சதங்களும், 19 அரை சதங்களும் அடங்கும். ஆறு முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 


அதேபோல ஒருநாள் சர்வதேச போட்டியில் 216 போட்டிகளில் விளையாடி 10232 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 38 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். அவரது சராசரி 59.84 ஆகும். நான்கு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.


விராட் கோலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர். அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.