இந்திய அணி அடுத்தாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் முதலில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட சீனியர் பிளேயர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும், இந்திய அணிக்காக இதுவரை ஒரு 20 ஓவர் போட்டியில் கூடாத விளையாடாத இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சுற்றுப் பயணம்


இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருக்கிறது. புத்தாண்டு முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகிக் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு சீனியர் பிளேயர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் படை 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இந்த அணியே இலங்கை தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஊசலில் இருந்த பாகிஸ்தான்! தூக்கி நிறுத்திய கேப்டன் பாபர் அசாம்
 
விராட் கோலிக்கு பதில் இவர்


காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ரோகித் சர்மா மற்றும் பார்ம் இல்லாத கே.எல்.ராகுல் ஆகியோர் வரிசையில் விராட் கோலிக்கும் பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளது. இதனால் அவருடைய இடத்தில் 31 வயதான ராகுல் திரிபாதியை களமிறக்க இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. ராகுல் திரிபாதி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது கனவாகவே இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவருடைய பெயர் இடம்பெற்றாலும், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. 


வாய்ப்புக்கு காத்திருக்கும் திரிபாதி 


ராகுல் திரிபாதி ஐபிஎல் 2022ல் 14 போட்டிகளில் விளையாடி 414 ரன்கள் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டத்தால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்ட ராகுல் திரிபாதி, ஒருமுறைகூட பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இப்போது இலங்கை தொடரிலும் திரிபாதி பெயர் அடிபடுகிறது. ஆனால் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  


ராகுல் திரிபாதி ரெக்கார்டு 


ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ராகுல் திரிபாதி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் 49 முதல் தர போட்டிகளிலும், 53 போட்டிகளிலும் லிஸ்ட் ஏவில் விளையாடி இருக்கிறார். ஆனால் அவரால் சர்வதேச அளவில் அறிமுகமாக முடியவில்லை. ராகுல் திரிபாதி முதல் தர கிரிக்கெட்டில் 2656 ரன்கள் குவித்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம் லிஸ்ட் ஏ பிரிவில் 1782 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


மேலும் படிக்க | IPL Auction: உச்சகட்ட விரக்தியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ