சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்றோரை முந்தி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி-20) 23000 ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி ஆனார். தனது 490 வது இன்னிங்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தான் சந்தித்த முதல் ஓவரில் இந்த சாதனையை எட்டினார். 23,000 ரன்களை எடுத்த வீரர்கள் என்ற மைல்கல்லை எட்டிய பட்டியலில், முதலிடத்தில் விராட் கோலி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை ஏழு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே 23000 ரன்களை கடக்க முடிந்தது. அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் (522 இன்னிங்ஸ்), ரிக்கி பாண்டிங் (544), ஜாக் காலிஸ் (551), குமார் சங்கக்கார (568), ராகுல் திராவிட் (576) மற்றும் மஹேல ஜயவர்த்தனா (645) என அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளனர். 


மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி ஏழாவது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 100 சதங்கள் மற்றும் 164 அரைசதங்களுடன் 664 போட்டிகளில் 34357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


ALSO READ | Black Water: விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!


அதேபோல முன்னாள் இலங்கை வீரர் சங்கக்காரா (Kumar Sangakkara) 28016 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் 27483 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) உள்ளார்.


இன்று தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து (england vs india) அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி போட்டியில் (4th Test) டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி முதலில் களம் இறங்கியது. 


8.6 வது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ரோஹித் ஷர்மா 11 (27) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து ஆடினார்கள். 13.5 வது ஓவரில் ராபின்சன் வீசிய பந்தில் ராகுல் 17 (44) ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அதேபோல 19.4 வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தில் புஜாரா 4 (31) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா நிதானமாக ஆடினார்கள். இருப்பினும் 29.6 வது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ரவீந்திர ஜடேஜாக் 10 (34) ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.


ALSO READ | 4th Test: டாஸ் வென்றது இங்கிலாந்து; இந்தியா பேட்டிங்; அஷ்வினுக்கு இடம் இல்லை


ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற நான்காவது போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்திய அணியின் நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR