புது டெல்லி: இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 சர்வதேச தரவரிசையில் (ICC Men's T20 International) இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (Lokesh Rahul) ஐந்தாவது இடத்தையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 24 இடங்கள் முன்னேறி 59வது இடத்தையும் பிடித்தார். அதே சமயம் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி (Virat Kohli) டாப்-10 பட்டியலில் இருந்து வெளியேறினார். அவரது சமீபத்திய தரவரிசை 11 வது இடமாகும். அவரது கணக்கில் 657 ரேட்டிங் புள்ளிகள் உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான 3 டி20 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (Babar Azam) ரன் குவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அவரது தரவரிசையை பாதிக்கவில்லை. அவர் 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானும் (Mohammad Rizwan) ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார், இது அவருக்கு தரவரிசையில் முன்னேற உதவியது. இந்த தொடரை அவரது அணி 3-0 என கைப்பற்றியது. 


கே.எல்.ராகுல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரிஸ்வானைக் காட்டிலும் 6 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 80 ரன்கள் எடுத்தார். இந்த தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.


ALSO READ | சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்ட விராட் கோலி.. வைரலாகும் வீடியோ!


ஆட்டநாயகன் ரோஹித் சர்மா:
நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 தொடரிலும் ரோஹித் ஷர்மாவின் (Rohit Sharma) பேட் கடுமையாக விளையாடியது. அவர் 3 போட்டிகளில் 53 சராசரியில் 154 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என மொத்தம் 159 ரன்கள் எடுத்தார். மேலும் 3 போட்டிகளில் 2-ல் அரைசதம் அடித்துள்ளார். இதுதான் தொடரின் ஆட்டநாயகன் ஆனதற்குக் காரணம்.


இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் (Martin Guptill) 152 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு தரவரிசையில் மூன்று இடங்களை தாவி 13வது இடத்தில் இருந்து முதல் 10 இடங்களுக்கு முன்னேற உதவியது. 


புவனேஷ்வர் குமார் 19வது இடம் பிடித்துள்ளார்:
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner), 23வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறினார். இந்தத் தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 5 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த தரவரிசையில் தீபக் சாஹர் (Deepak Chahar) 19 இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போது 40வது இடத்தில் உள்ளார்.


ALSO READ | உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR