உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி!

நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 12:57 PM IST
  • கடைசி மூன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல். ராகுல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • சவுத் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த மற்றொரு வீரரான வான் டெர் டஸ்சென் டாப் 10 வீரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி!  title=

நேற்று ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிகளில் உலகின் டாப்-10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன் நான்காவது இடத்தில் இருந்த கோலி, இந்திய அணியின் மோசமான தோல்வியின் காரணமாக தற்போது 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  கடைசி மூன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல். ராகுல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெரிதாக ரன்கள் அடிக்காத ராகுல் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நம்பியா அணிகளுக்கிடையே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.  இருப்பினும் இது இந்திய அணிக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக அமையவில்லை. 

virat

சவுத் ஆப்பிரிக்கா அணியின் அய்டன் மார்கரம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளுக்கு 52 ரன்கள் அடித்து அசத்தினார்.  இதன் காரணமாக ஐசிசி தர வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.  சவுத் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த மற்றொரு வீரரான வான் டெர் டஸ்சென் டாப் 10 வீரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.  மேலும் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடம் சாம்பா மற்றும் ஹேர்செல்வுட் டாப் 10 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  இவர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

 

ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த அசரங்கா 797 புள்ளிகளுடன் சிறந்த டி20 பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார்.  இந்திய அணியை சேர்ந்த ஒரு பவுலர் கூட 10-ல் இடம் பெறவில்லை.  T20யின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் நான்காம் இடம் பிடித்துள்ளார்.  மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு வீரரான மிட்செல் மார்ஷ் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ நெட் ரன்ரேட் என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News