ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. 


இதில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.



இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் பின்னுக்குத்தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 6 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது!