ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்ட விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் (Test) கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த இந்திய அணியின் (Team India) கேப்டன் விராட் கோலி (Virat Kohli).
புது டெல்லி: சர்வதேச டெஸ்ட் (Test) கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் தரவரிசை பட்டியல் இன்று பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (International Cricket Council) வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்திய அணியின் (Team India) கேப்டன் விராட் கோலி (Virat Kohli) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) இடம் பெற்றுள்ளார். டாப் 10 வீரர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 4 வது இடத்தில் சேடேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) மற்றும் 6 வது இடத்தில் அஜின்கியா ரஹானே (Ajinkya Rahane) உள்ளனர்.
928 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியை சேர்ந்த தலா ஒரு வீரர் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதே நேரத்தில் நியூசிலாந்திற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்டில் தனது சதத்திற்குப் பிறகு மார்னஸ் லாபூசாக்னே முதல் ஐந்து இடங்களுக்கு முன்னேறி உள்ளார். கடந்த வாரம் விராட் கோலியை விட ஐந்து புள்ளிகள் பின்தங்கி இருந்த ஸ்டீவ் ஸ்மித், பெர்த் டெஸ்டில் 43 மற்றும் 16 ரன்கள் எடுத்த பின்னர், மேலும் பின்னோக்கி சென்றார். ஆனாலும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சை பொறுத்த வரை ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியை பொறுத்த வரை ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் பட்டியலை பொறுத்த வரை 2 வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் 6 வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) இடம் பெற்றுள்ளனர். முதலிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த ஜேசன் ஹோல்டர் (Jason Holder) உள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களம் கண்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 102*(151) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஷிம்ரான் ஹிட்மையர் 139(106) ரன்கள் குவித்து அணியின் வெற்றினை உறுதி செய்தார். ஆட்டத்தின் 47.5-வது ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.