ஐபிஎல் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால், இப்போதே ஐபிஎல் தொற்று கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாக பரவ தொடங்யிருக்கிறது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை தொடங்கியிருக்கும் நிலையில், தோனி மார்ச் 2 ஆம் தேதி சென்னை வந்து அணியுடன் இணைகிறார். மார்ச் 3 ஆம் தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல் ஆர்சிபி அணியும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. ஆர்சிபி அணிக்காக விளையாடும் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அணியுடன் இணைய இருக்கிறார். இந்நிலையில் ஆர்சிபி அணி பாட்காஸ்டில் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். விராட் கோலி பேசும்போது, தோனி தலைமையின் கீழ் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானேன். அவர் என்னிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் வரை, அதற்காக காத்திருந்தேன். அவர் பல வழிகளில் ஈர்த்துள்ளார்.


மேலும் படிக்க | Virat Kohli: 'நான் எப்போதும் தோனியின் வலது கை தான்' - விராட் கோலி பெருமிதம்


ஆனால், நான் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடி பல நாட்கள் ஆகிறது. ஒரு இறுக்கமான உணர்வுடன் இருப்பதுபோல் தோன்றுகிறது. நான் கடினமான நாட்களில் இருந்தபோது எனக்கு குடும்பம் மற்றும் உறவினர்களை கடந்து நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்தவர் தோனி. அவரிடன் நான் எப்போது வேண்டுமானாலும், எல்லா விஷயங்கள் குறித்தும் ஓபனாக பேச முடியும். அந்தளவுக்கு அவருக்கும் எனக்குமான உறவு இருக்கிறது. கிரிக்கெட் களத்திலும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் நாங்கள் நல்ல உறவில் இருக்கிறோம். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.



அவர் சந்தித்த மற்றும் சாதித்த அனைத்து விஷயங்களையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதேநேரத்தில் சுவாரஸ்யமான ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அழைத்தால் 99 விழுக்காடு எடுக்கமாட்டார். ஏனென்றால் எம்எஸ் தோனி எப்போதும் மொபைல் பயன்படுத்தமாட்டார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை விராட் கோலி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


மேலும் படிக்க | 145 ஆண்டுகளில் முதல்முறை! டெஸ்ட் கிரிக்கெட்டில் சரித்திரத்தை மாற்றி எழுதும் ஹாரி புரூக்!


மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ