இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆகியோர் ICC தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குறிப்பிடத்தக்க ஆட்டங்களுக்குப் பிறகு சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் ஒருநாள் வீரர் தரவரிசையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளார்.


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் தொடரினை வென்றது. இந்த தொடரில் கண்ட வெற்றியின் மூலம் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா முறையே இரண்டு மற்றும் மூன்று மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.


தொடரில் இந்தியா கண்ட வெற்றியின் மூலம் அணித்தலைவர் கோலி ஒருநாள் தரவரிசைக்கான புள்ளி பட்டியலில் மொத்தம் 886 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மற்றும் அவரது நம்பர் ரோகித் சர்மா 868 புள்ளிகளுடன் 2 இடத்தினை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசாம் 829 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


இதற்கிடையில், தவான் இரண்டு இன்னிங்ஸ்களில் 170 ரன்களுடன் 15-வது இடத்தைப் பிடிக்க ஏழு இடங்கள் முன்னேறியுள்ளார். 


தொடர் தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டியில் காயமடைந்த தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். நடந்து முடிந்த தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்த போதிலும், தரவரிசை பட்டியலில் அவரது இருப்பு பின்னடைவு கண்டு 50-வது இடத்திற்கு சென்றுள்ளார்.


பந்து வீச்சாளர்களிடையே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டு இடங்களை முன்னேற்றி 27-வது இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டு இன்னிங்சில் 45 ரன்கள் எடுத்ததோடு, 10-வது இடத்தைப் பெறும் ஆல்-ரவுண்டர்ஸ் பட்டியலில் நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.


இறுதி ஒருநாள் போட்டியில் 131 ரன்கள் எடுத்தது உட்பட மொத்தம் 229 ரன்கள் எடுத்து தொடரில் ரன்-ஸ்கோரிங் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், நான்கு இடங்கள் தாண்டி 23-வது இடத்திற்கு முன்னேறி, சிறப்பான செயல்திறனுக்காக வெகுமதி பெற்றுள்ளார்.


இந்த தொடரில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவின் ஐந்து விக்கெட்டுகள் அவருக்கு 37-வது இடத்தை பெற்று தந்துள்ளது. அதேவேளையில் கேன் ரிச்சர்ட்சன் பந்து வீச்சாளர்களுக்கான ICC ஒருநாள் தரவரிசையில் 77-வது இடத்திலிருந்து 65-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.