வைரலாகும் விராட்டின் செல்ஃபி: அந்த குழந்தை யார் என குழம்பும் நெட்டிசன்கள்
சமீபத்தில், ஒரு பெண் குழந்தையுடன் கோலி எடுத்துக்கொண்ட ஒரு பழைய செல்ஃபி இணையத்தில் வைரலானது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்தனர்.
இந்த நட்சத்திர ஜோடி தங்களால் முடிந்த வரை, வாமிகாவை பொதுப்பார்வையிலிருந்தும், விலக்கியே வைத்துள்ளனர். 'ஆஸ்க் மீ எனிதிங்’ என்ற அமர்வின் போது விராட் கோலி (Virat Kohli), இது குறித்து பேசினார்.
‘எங்கள் மகள் தானாகவே சமூக ஊடகங்களைப் பற்றி தெரிந்துகொள்ளாத வரை, அவரை சமூக ஊடகங்களுக்கு முன் கொண்டு வர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்’ என விராட் கூறினார்.
இருப்பினும், சில நெட்டிசன்களின் படி, வாமிகாவை தற்போது பலர் பார்த்து விட்டனர்!! சமீபத்தில், ஒரு பெண் குழந்தையுடன் கோலி எடுத்துக்கொண்ட ஒரு பழைய செல்ஃபி இணையத்தில் வைரலானது. பல ரசிகர்கள் அந்த குழந்தை வாமிகா என்று நினைக்கிறார்கள்.
ஆனால், நெட்டிசன்களின் நம்பிக்கைக்கு மாறாக, அந்த வைரல் படத்தில் இருப்பவர் வாமிகா இல்லை. கோலியின் கைகளில் இருக்கும் குழந்தை ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) மற்றும் கீதா பஸ்ராவின் மகள் ஹினயா ஹீர் பிளாஹா என தெரியவந்துள்ளது.
கோலியின் அந்த வைரலான புகைபடம் இதோ:
இதற்கிடையில், ஜனவரி 11 ஆம் தேதி இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக அமையவுள்ளது. அடுத்த ஆண்டு இந்த தேதியில், கோலி மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் மகள் வாமிகாவுக்கு ஒரு வயதாகும். மேலும் அதே தினம், இந்திய கேப்டன் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் தனது 100வது டெஸ்டில் விளையாடுவார்.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சனிக்கிழமையன்று தென் ஆப்பிரிக்காவிற்கான சுற்றுப்பயணம் தொடரும் என்று அறிவித்தன. ஆனால் இந்திய அணியின் புறப்பாடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்படும் மற்றும் டி 20 போட்டிகள் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக இருக்காது.
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2021-22 இந்திய தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயண அட்டவணை:
1வது டெஸ்ட் (டிசம்பர் 26-30): செஞ்சுரியன்
2வது டெஸ்ட் (ஜனவரி 03-07): ஜோகன்னஸ்பர்க்
3வது டெஸ்ட் (ஜனவரி 11-15): கேப்டவுன்
1வது ஒருநாள் போட்டி (ஜனவரி 19): பார்ல்
2வது ஒருநாள் போட்டி (ஜனவரி 21): பார்ல்
3வது ஒருநாள் போட்டி (ஜனவரி 23): கேப்டவுன்
ALSO READ:IND vs NZ: அம்பயரின் தவறான முடிவு, கடுப்பில் மட்டையை ஓங்கி அடித்த விராட் கோலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR