அனுஷ்கா ஷர்மாவின் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர் சோயப் அப்ரிதியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.  சமீபத்திய நேர்காணலில் அப்ரிடி, விராட் கோலி (Virat Kohli) திருமணம் செய்திருக்க கூடாது, சமீபத்திய அவரது மோசமான ஆட்டங்களுக்கு திருமணம் செய்து கொண்டதே முக்கியமான காரணம் என்று சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த கருத்து அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்களை பெரிதும் கோபப்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Fitness: எடையை குறைத்து உடற்தகுதி இலக்கை எட்டிய ரோஹித் சர்மா!


பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி (Afridi Pakistan) ஒரு நேர்காணலில் கூறியதாவது, " சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார், அவர் திருமணம் செய்து இருக்காமல் 10 - 12 ஆண்டுகள் கூடுதலாக தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.  நான் அவரது இடத்தில் இருந்திருந்தால், ரன்களை அடித்து கொண்டு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து இருப்பேன்.  இந்த வித மகிழ்ச்சி எப்பொழுதும் கிடைக்காது.  திருமணம் செய்து கொள்வதை நான் ஒருபோதும் தவறாக கூறவில்லை ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 



குடும்பம் குழந்தைகள் என்று வந்துவிட்டால் கூடுதல் பொறுப்பும் வந்து விடும், அந்த வகையில் மன அழுத்தங்களும் அதிகமாக வரும். ஒரு கிரிக்கெட்டரின் வாழ்க்கை 14 முதல் 15 ஆண்டுகள் மட்டுமே, அதில் 4 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே அவர் பீக்கில் இருப்பார். இந்த முக்கியமான தருணத்தில் தற்போது விராட் கோலி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.  தனது முக்கியமான பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு அவர் திருமணம் செய்திருக்கலாம்" என்றும் கூறினார். 



சோயப் அப்ரிடியின் இந்த கருத்து அனுஷ்கா சர்மா - விராட் கோலி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  விராட் கோலியின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட நீங்கள் யார், அனைவரது கவனத்தையும் பெற இது போல் பேசி வருகிறார், அப்ரிடி விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அப்ரிடியை வறுத்தெடுத்து வருகின்றனர்.  விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா 2013ஆம் ஆண்டிலிருந்து நண்பர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு 2017ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. 2017,18,19 ஆம் ஆண்டில் விராட் கோலியின் பேட்டிங்கை கொஞ்சம் பாருங்கள் என்று அப்ரிடிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.


ALSO READ | வாமிகா விவகாரம்: விராட் கோலிக்கு நெட்டிசன்கள் பதிலடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR