IND vs SL, Virat Kohli 73th Century: இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அஸ்ஸாம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியாவுக்கு ரோஹித் - கில் இணை ஓப்பனிங் இறங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இணை மிரட்டலாக விளையாடி 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுப்மன் கில் 70 ரன்களுக்கு வெளியேற சிறிது நேரத்திலேயே ரோஹித் சர்மாவும் 83 ரன்களை எடுத்தார். அடுத்து, விராட் கோலி நிலைத்து நின்று விளையாட தொடங்கினார். இதில், ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கு அவுட்டாக விரோட் கோலி - கேஎல் ராகுல் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 


மேலும் படிக்க |   IND vs SL: சூர்யகுமாரை சோதிக்கும் இந்திய அணி... தொடர்ந்து கோளாறு கொடுக்கும் கேஎல் ராகுல்!


தொடர்ந்து, விராட் கோலி அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில், ராகுல் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, விராட் கோலி ஒருநாள் அரங்கில் தனது 46ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும், இது அவரின் 73ஆவது சர்வதேச சதமாகும். 


இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்களை குவித்தது. விராட் கோலி 113 ரன்களுடன் கடைசி கட்டத்தில் வெளியேறினார். இலங்கை பந்துவீச்சு தரப்பில், ராஜிதா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



344 ரன்களுடன் இலங்கை அணி தனது பேட்டிங்கை தொடர்ந்து வரும் நிலையில், விராட் கோலி தற்போது சச்சின் நீண்ட காலமாக வைத்திருந்த மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, ஒருநாள் போட்டிகளில், அதுவும் இந்திய மண்ணில் அதிக சதங்களை (20 சதங்கள்) அடித்த சாதனையை சச்சின் வைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி அந்த சாதனையை சமன்செய்துள்ளார். இந்திய மண்ணில் இன்னும் ஒரு சதம் போதும் சச்சினின் சாதனையை தூள் தூளாக்க... 


மேலும், ஒருநாள் அரங்கில் அதிக சதங்கள் (49) அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இன்னும் 4 சதங்களை அடித்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்தவர் விராட் கோலி என்ற மாபெரும் சாதனையை படைப்பார். 



கோலி இன்று அடித்த சதம், இலங்கைக்கு எதிராக அவரின் 9ஆவது சதம். இலங்கைக்கு எதிராக அதிக சதங்களை அடித்த இந்திய வீரர் இவர்தான். மேலும், சச்சின், விராட் கோலி இருவரும் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தலா 9 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  IND vs SL: தம்பி நீங்க உடம்ப கவனிங்க... உம்ரான் மாலிக்கை நம்பி பும்ராவை கழட்டிவிடும் பிசிசிஐ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ