கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் பலவற்று முறியடித்து வரும் விராட் கோலி, மேலும் ஒரு சாதனையினை மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான நடப்பு தொடரில் முறியடிக்கவுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 21-ஆம் நாள் துவங்குகிறது. இத்தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையினை முறியடிக்க விராட் கோலிக்கு பிரகாசமான வாய்புள்ளதாக தெரிகிறது.


இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பு அளித்து வருகின்றார் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கோலி விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது எதிர்வரும் தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்னும் பெருமையினை பெறவுள்ளார். தற்போதைய புள்ளி விவரங்களின் படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1573 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு அடுத்த நிலையில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1387 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 187 ரன்கள் எடுத்தால் சச்சின் பெயரினை இப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடுவார் கோலி. எதிர்வரும் ஒருநாள் தொடரில் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் விராட் கோலிக்கு 187  ரன்கள் எடுப்பது என்பது சிரமமான காரியம் அல்ல., எனவே இந்த தொடரில் சச்சின் சாதனையினை விராட் முறியடிப்பது உறுது...