விராட் கோலி பவுலிங்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், தூண் என்று அழைக்கப்படும் விராட் கோலி, வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் பவுலிங் செய்தார். ஹர்திக் பாண்டியா ஓவர் வீசும்போது திடீரென காயம் ஏற்பட்டு களத்தில் இருந்து வெளியேறியதால், எஞ்சிய பந்துகளை விராட் கோலி தான் வீசினார். அவர் திடீரென பந்துவீச வந்ததும், ரசிகர்கள் மற்றும் அணியினருக்கே ஆச்சரியம். இந்தப் போட்டியில் 3 பந்துகள் விராட் கோலி வீசியதில் 2 ரன்களை வங்கதேசம் அணி எடுத்தது. 



மேலும் படிக்க | IND vs BAN: டாஸ் வென்றால் ரோஹித் இதைதான் செய்யணும்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?


விராட்டின் விநோதமான ரெக்கார்டு



இந்தப் போட்டியில் தான் விராட் கோலி பந்துவீசுகிறார் என நினைக்க வேண்டாம். விராட் கோலி ஏற்கனவே இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் ஓவர் வீசியுள்ளார். அப்படி ஒருமுறை பந்துவீச வரும்போது, பந்து எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே விக்கெட் எடுத்தார். அதாவது 0 பந்தில் விக்கெட் எடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலி வசம் இருக்கிறது. 


இங்கிலாந்து அணிக்கு எதிராக சாதனை



இந்த சாதனையை விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் முதன்முதலில் படைத்தார்.  2011 ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த தொடரின் ஒருபோட்டியில் விராட் கோலி பந்துவீச வந்தார்.



அப்போது, விராட் கோலி வீசிய பந்து வைடாக செல்ல, கீப்பராக இருந்த கேப்டன் எம்எஸ் தோனி ஸ்டம்பிங் செய்தார். இதில் கெவின் பீட்டர்சன் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய வேண்டியிருந்தது. அதாவது பந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பே, 0 பந்தில் விக்கெட்டை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை விராட் கோலி வசம் வந்தது. 


மேலும் படிக்க | 2023 உலகக் கோப்பை தொடரில் மிகவும் திறமையான பீல்டர் பட்டியலில் விராட் கோலி No.1


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ