டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நீக்கம்?
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இந்திய அணியில் இடம் பெறமாட்டார் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
Virat Kohli In Team India: டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் மாதங்களில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறி என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இடம் கேள்விக்குறி
விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமல் இருக்கிறார். முக்கியமான வீரராக இருந்தாலும், ஃபார்ம் இல்லை என்றால் அணியில் வைத்திருக்க தேர்வாளர்கள் விரும்பமாட்டார்கள். அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்யும். இப்போதைய சூழலில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலிக்கு இடம் இல்லை. அதனால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | களத்தில் அத்துமீறிய ரசிகர்கள்- விராட் கோலி கொந்தளித்த வீடியோ வைரல்!
வீரேந்திர சேவாக் கருத்து
விராட் கோலியின் பார்ம் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஃபார்மில் இல்லாத அவரை பிசிசிஐ தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ள சேவாக், விராட் கோலிக்கு பதிலாக திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே முயற்சி செய்வார்கள் என தான் நினைப்பதாக கூறியுள்ளார். இந்திய அணிக்கான டாப் 3 பேட்ஸ்மேன்கள் வரிசையில் அவருக்கான இடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கேப்டன் ரோகித் சர்மா
இஷான் மற்றும் ரோகித் சர்மா ஓபன்னிங் ஜோடியாக இருக்க வேண்டும். கே.எல்.ராகுல் 3வது இடத்தில் பொருத்தமாக இருப்பார். இடது மற்றும் வலது காம்பினேஷன் பேட்டிங்கிற்கு ரோகித்தும், இஷானும் சரியாக இருப்பார்கள். இவர்களைத் தவிர பார்த்தால் ராகுல் மற்றும் இஷான் கிஷன் கூட ஓப்பனிங் இறங்கலாம் என சேவாக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணியை பதற வைத்த அயர்லாந்து ’பாண்டியா’ ஹாரி டெக்டர்
உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமியுடன் சேர்ந்து உம்ரான் மாலிக் இந்திய அணியில் இருந்தால் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR