அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்! வைரலாகும் சேவாக் மகனின் பேட்டிங்!
விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டிக்கான டெல்லி யு-16 அணியில் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆரியவிர் இடம்பிடித்துள்ளார்.
வீரேந்திர சேவாக்கின் மகன் ஆரியவிர் பீகாருக்கு எதிரான டெல்லியின் விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டிக்கான அணியில் பதினைந்தாவது வீரராக இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 22 அன்று வீரேந்திர சேவாக்கின் மகன் ஆரியவிர் 2022-23 விஜய் மெர்ச்சன்ட் டிராபிக்கான டெல்லி யு-16 அணியில் இடம் பிடித்தார். பட்டியலில் 79 சிறுவர்கள் பெயரிடப்பட்டிருந்த போதிலும் சேவாக்கின் மகனிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் அவர் இடம்பெற்றார். இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் அர்னவ் எஸ் புக்கா தலைமையிலான அணியில் இடம்பிடித்தார்.
மேலும் படிக்க | INDvsBAN: இரண்டாவது ODI-ல் இந்தியா செய்த அதிரடி மாற்றங்கள்!
அணியில் தேர்வைக் கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். தாய் ஆர்த்தி சேவாக் தனது மகன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், ஆரியவிர் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேரில் இடம் பெறவில்லை, ஆனால் பீகாருக்கு எதிரான போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். சேவாக்கின் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறுவதற்கு முன்பே, பல பேச்சுகள் எல தொடங்கி உள்ளது.
ஆர்யவீரின் பல பேட்டிங் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன, அவர் ஏற்கனவே 10Kக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். அந்த வீடியோக்களில் அவர் பந்தை நன்றாக டைமிங் செய்வதை நிச்சயமாகக் காணலாம். மற்றொரு வீடியோவில், அவர் முன்னாள் உள்நாட்டு வீரரான மிதுனை எதிர்கொள்கிறார். தற்போது நடந்து வரும் விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டியில் டெல்லி யு-16 அணி பீகாரில் ஆதிக்கம் செலுத்துகிறது, அடுத்ததாக டிசம்பர் 11 ஆம் தேதி குஜராத்தை எதிர்கொள்கிறது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு முழுமையான வெற்றியைப் பதிவுசெய்து ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ