லட்சுமண் கொடுத்த 2 ஐடியா; இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பயிற்சியாளர் லட்சுமண் கொடுத்த ஐடியா மூலம் இந்தியா வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விவிஎஸ் லட்சுமண், இந்திய அணியின் பயிற்சியாளராக இந்த தொடருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஜிம்பாப்வே தொடரில் களமிறக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா என்டிரியால் 27 வயது வீரருக்கு நேர்ந்த சோகம்
முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 189 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி, சிறப்பாக விளையாடி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னணியில் பயிற்சியாளர் லட்சுமணன் கொடுத்த ஐடியா இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. போட்டிக்கு முன்பாக மைதானத்தை பார்வையிட்ட அவர், ஈர்ப்பதம் இருப்பதை பார்த்துள்ளார். இதனால், டாஸ் வெற்றி பெற்றால் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் எனவும், ஆட்டம் தொடங்கி சில மணி நேரங்கள் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவும் கேப்டன் கே.எல்.ராகுலிடம் தெரிவித்துள்ளார். அவரும் டாஸ் ஜெயித்தவுடன் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
மேலும், ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றத்திலும் முக்கிய முடிவை பயிற்சியாளர் லட்சுமணன் எடுத்துள்ளார். வழக்கமாக ஓபனிங் இறங்கும் கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் ஓபனிங் இறங்கவில்லை. மாறாக நான்காவது இடத்தில் விளையாட இருந்தார். ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஓபனிங் இறங்கினர். ஏனென்றால், கே.எல்.ராகுலுக்கு ஒருநாள் போட்டியில் 4வது இடம் சிறப்பாக இருக்கும் என கணித்த லட்சுமணன், அதனை இனிவரும் காலங்களில் கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளார். அதனை கே.எல்.ராகுலும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த இரண்டு முடிவுகளும் இந்திய அணிக்கு சாதகமான முடிவுகளை கொடுத்திருப்பதால் லட்சுமணனுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ