ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் சென்னை அணியைப் பொறுத்தவரை மொத்தம் 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.


                                                


சென்னை அணிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்படாமல் அதற்கு முந்தைய இடத்தில் இருப்பது. ப்ளே ஆஃப் செல்வதற்கான நேரடி வாய்ப்பை சென்னை அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. ஆனாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்து சென்னை ப்ளே ஆஃப் செல்ல கொஞ்சம் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.


இதனால் அடுத்த ஒவ்வொரு போட்டியும் சென்னைக்கு மிக முக்கியம். அதேபோல டெல்லி அணியும் அனைத்துப் போட்டிகளையும் வெல்லவேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை இன்று சந்திக்கவுள்ளது.


இந்நிலையில், திட்டமிட்டபடி இப்போட்டி இன்று நடைபெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. காரணம்- கொரோனா! ஆம், ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கமாம்.


மேலும் படிக்க | Play-Offs: வெளியேறிவிட்டதா சென்னை அணி?! - லேட்டஸ்ட் தகவல் இதோ!


                                                                          


அந்த வகையில், இன்று டெல்லி அணியினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவ்வணியின் நெட் பௌலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாம். இதனால், ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் மாலையில் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படுமாம்.


அதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என்றால் மட்டுமே போட்டி நடைபெறுமாம். இல்லையென்றால் இப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்படுமாம். இந்தத் தகவலால் ஐபிஎல் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR