உலக கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதும் நிலையில் இந்திய அணியுடன் மோதும் மற்றொரு அணி மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. இப்போதைய சூழலில் 99.99 விழுக்காடு நியூசிலாந்து அணி மும்பையில் இந்திய அணியை அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு மையிரிலையில் ஒரு  வாய்ப்பு உள்ளது. அது நடக்காது என்றாலும், அப்படியொரு வாய்ப்பு இருப்பதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் கிண்டலாக அவரின் சொந்த நாட்டு அணியை கலாய்த்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்கள்தான்... இந்தியாவின் ஆல்ரவுண்டர் பஞ்சம் போகுமா...?


நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாசிம் அக்ரம், “ பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய 300 ரன்களுக்கும் மேல் அடித்துவிட வேண்டும். அதன்பிறகு இங்கிலாந்து அணியை டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டிவிட வேண்டும். டைம் அவுட் என்ற முறையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடலாம்.” என காமெடியாக கூறியுள்ளார். அவரின் இந்த கிண்டல் சோஷியல் மீடியாவில் செம வைரலாகியுள்ளது. 


பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் உலக கோப்பை தொடரை வெற்றிகரமாகவே தொடங்கினர். ஆரம்பத்தில் சில போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த பின்னர் ஒரு சில போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வியை தழுவினர். தொடக்க போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் 8வது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்தது.


அங்கிருந்து பாகிஸ்தான் அணிக்கு வீழ்ச்சி தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி அதிர்ச்சியைக் கொடுத்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் வீழ்ந்தது. இருப்பினும் அதன் பின் எழுச்சி கண்ட அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. இலங்கை அணி ஒருவேளை நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அணி 99 விழுக்காடு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 


மேலும் படிக்க | நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் - இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ