அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்கள்தான்... இந்தியாவின் ஆல்ரவுண்டர் பஞ்சம் போகுமா...?

Indian Cricket Team: இந்தியாவில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் கிராக்கி உள்ள நிலையில், சையித் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று ஆல்-ரவுண்டர்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 9, 2023, 09:13 PM IST
  • பிரசித் கிருஷ்ணா, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.
  • இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு என சரியான மாற்று இல்லை.
  • வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் பஞ்சம் இந்திய அணியில் உள்ளது.
அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்கள்தான்... இந்தியாவின் ஆல்ரவுண்டர் பஞ்சம் போகுமா...? title=

India National Cricket Team: நடப்பு ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்திய அணிக்கு இதுவரை பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இருப்பினும், சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் இதுவரை கூடுதல் அனுகூலத்தைதான் வழங்கியிருக்கிறது. முதல் 15 வீரர்களில் இடம்பெற்ற அக்சர் படேல் காயம் காரணமாக விலக அணிக்குள் அஸ்வின் கொண்டுவரப்பட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். குறிப்பாக, இந்திய அணி (Team India) 2 ப்ரீமியம் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு ஹர்திக் பாண்டியா என்ற மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை வைத்திருந்தது. 8ஆவது இடத்தில் ஸ்பின்னராக அஸ்வினையும், வேகப்பந்துவீச்சாளரில் ஷர்துலை முதலில் விளையாடியது. ஆனால், ஹர்திக் பாண்டியா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயத்தில் சிக்கியதால், அவர் தொடரில் இருந்து விலக நேரிட்டது. 

அதன்பின், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அடுத்தடுத்த போட்டிகளில் ஷமி பந்துவீச்சுக்கும், சூர்யகுமார் பேட்டிங்கிற்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் களமிறங்கினர். ஷமியின் வருகைக்கு பின் பந்துவீச்சு அசூர பலம் பெற்றது. ஆறாவது பந்துவீச்சாளர் என்ற பேச்சே இல்லாமல் ஆக்கிவிட்டார் ஷமி. 

இருப்பினும், ஒரு அணிக்கு ஆறாவது பந்துவீச்சாளர் முக்கியம், அதில் வேகப்பந்துவீச்சாளர் மிக முக்கியமாகும். அப்படியிருக்க ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) மாற்று என கைக்காட்டும் அளவிற்கு கூட இந்திய அணியில் இப்போது யாரும் இல்லை. தற்போது மாற்று வீரராகவும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாதான் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | இந்தியாவை வீழ்த்த இது ஒன்றுதான் வழி... எதிரணிகளுக்கு கில்கிறிஸ்ட் கொடுத்த ஐடியா - என்ன தெரியுமா?

அதாவது, ஹர்திக் பாண்டியாவுக்கு சரியான மாற்று என யாருமே இல்லை. அந்த வகையில், நடைபெற்று முடிந்த சையித் முஷ்டாக் அலி (SMAT) என்ற உள்நாட்டு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களை இங்கு காணலாம். ஹர்திக் பாண்டியாவும் ஐபிஎல் தொடர் மூலமே உலகுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்தியா அதன் அடுத்த வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் தொடங்கும் 50 ஓவர் வடிவத்தின் உள்நாட்டு தொடரான விஜய் ஹசரா தொடரிலும் இதுகுறித்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், இந்த மூன்று வீரர்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

பட்டையை கிளப்பும் பரோடா வீரர்

பரோடா அணியில் விளையாடும் இன்னிங்ஸின் அனைத்து கட்டங்களிலும் பந்து வீசக்கூடியவர் அபிமன்யூசிங் ராஜ்புத் (Abhimanyusingh Rajput). இவரின் வயது 25. நடந்த முடிந்த SMAT தொடரில் 17.69 சராசரியில் 13 விக்கெட்டுகளை அவர் எடுத்தார். அசாம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 29 ரன்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பரோடா அந்த போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பேட்டிங்கிலும் இவர் பல்வேறு நேரங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார், அதாவது முதல் பேட்டிங்கிலும் சரி சேஸிங்கிலும் சரி. பரோடாவில் நம்பர் 3இல் இறங்கும் இவர் பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில்  42 பந்தில் 61 ரன்கள் குவித்தார். இருப்பினும், அந்த போட்டியை பஞ்சாப் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் படிக்க | IPL 2024 Auction: ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்பு இந்த 3 வீரர்களை கழட்டிவிடும் சிஎஸ்கே!

பேட்டிங்கில் அவரது சராசரி 24.40 ஆக உள்ளது. குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட் 136.66இல் தொடர் முழுவதும் 123 ரன்களை எடுத்தார். இவர் SMAT தொடரில் எட்டு முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி ஏற்கனவே ஒரு சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி இந்திய அணியிலும் இவரது தேவை இருக்கும் என்பது உறுதி.

அடுத்த ஷர்துல் தாக்கூரா?

ஆகாஷ் சென்குப்தா (Aakash Sengupta) இந்த SMAT சீசனின் பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். இவரின் சிறப்பான ஆட்டமே அசாம் அணியை அரையிறுதி வரை அழைத்து வந்தது எனலாம். இவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்த போதிலும், இவர் தொடரின் தொடக்க போட்டியில் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஸ்டிரைக் ரேட் 205 ஆக உள்ளது, இதில் இருந்தே அவரின் பேட்டிங்கை புரிந்துகொள்ளலாம். இவரும் ஷர்துல் தாக்கூரை போல் செயல்படுகிறார் என்றே கூறப்படுகிறது. பந்துவீச்சிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் அதில் 2 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார். இவருக்கு 23 வயதுதான் என்பதால் இவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

கேப்டன் மெட்டீரியல்...

கோவா கேப்டன் தர்ஷன் மிசல் (Darshan Misal) தான் இந்த வரிசையில் முக்கியமானவர் எனலாம். இந்த SMAT சீசனில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலித்தார். நான்காவது, ஐந்தாவது வீரராக இறங்குகிறார். ஆனால், இவர் வேகப்பந்துவீச்சாளர் இல்லை, இடது கை மிஸ்ட்ரி ஸ்பின்னரான இவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இவரின் 31 என்பதே ஒரு சின்ன சருக்கல். 

மிசல் ஆறு ஆட்டங்களில் 16.62 சராசரி மற்றும் 6.65 எகானமியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தார். அவர் 30 சராசரி மற்றும் 187.50 என்ற குறிப்பிடத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டில் தொடரில் மொத்தம் 150 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, மிசல் 67 டி20 போட்டிகளில் விளையாடி 694 ரன்கள் மற்றும் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சராசரி முறையே 16.52 மற்றும் 25.74 என வைத்துள்ளார். டி20களில் க்ருணால் பாண்டியாவைப் போன்றே விளையாடுவதால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரராக இருப்பார். 

மேலும் படிக்க | நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் - இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News