புஜாராவுக்கு இனி இந்திய அணியில் இடமில்லை என சொடக்கு போடும் வாசிம் ஜாபர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த புஜாராவுக்கு இனி மீண்டும் வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அது குறித்து பேசிய வாசிம் ஜாபர், இனி புஜாராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.
புஜாரா நீக்கம்
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா இந்திய அணியில் இடம்பெறவில்லை. மோசமான பார்ம் காரணமாக சேட்டேஷ்வர் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதால், சேட்டேஷ்வர் புஜாரா இப்போது டெஸ்ட் அணிக்கு திரும்புவது கடினம் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். 2010 முதல் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் புஜாராவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் ஸ்டுவர்ட் பிராட் சாதனை
வாசிம் ஜாபர் அனுமானம்
சேட்டேஷ்வர் புஜாரா டெஸ்ட் பயணம் குறித்து அவர் பேசும்போது, 'புஜாராவைப் பொறுத்தவரை, அணிக்கு திரும்புவது சற்று கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புதிய வீரர்கள் மீது கவனம் செலுத்த பிசிசிஐ தொடங்கிவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் வருவார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்துள்ளார். ஷுப்மான் கில் மூன்று வடிவங்களிலும் விளையாடுவார். இதனால் புஜாரா மீண்டும் களமிறங்குவது கடினம் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அஜிங்க்யா ரஹானே
டெஸ்ட் அணியில் நீடிக்க வேண்டும் என்றால் தற்போதைய துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தொடர்ந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ரஹானே இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் தனது இரண்டு இன்னிங்ஸிலும் மீண்டும் மோசமாக அவுட்டாகியுள்ளார். இது அவரது நிலைத்தன்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. ரஹானே தனது ஆட்டத்தில் நிலைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அவரது பிரச்சினையாக உள்ளது. அவர் 80-90 டெஸ்ட் (84) விளையாடியிருக்கலாம். ஆனால் நிலைத்தன்மை அவருக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது என்றும் வாசிம் ஜாபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ