இந்தூரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்டர் டேவிட் மில்லரின் கேட்சை பிடித்த போது தவறுதலாக பவுண்டரி கயிற்றில் காலை வைத்தார் சிராஜ், இதனால் அது சிக்ஸ் என அறிவிக்கப்பட்டது.  இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பீல்டர் முகமது சிராஜை திட்டும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸில் தீபக் சாஹர் பந்து வீச்சின் போது இந்த சம்பவம் நடந்தது. மேலும் கேட்சை கோட்டை விட்டதால் கேப்டன் ரோஹித் சர்மாவும் கோபமடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோஹித்தின் செயலால் கடுப்பான ரிஷப் பந்த்!


 



ஓவரின் 5வது பந்து வீச்சில் சாஹர் 123 கிமீ லெந்த் பந்தை மில்லரிடம் வீசினார், மில்லர் அடித்த பந்தை ஃபீல்டர் முகமது சிராஜ் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச்சைப் பிடித்தார், ஆனால் அவர் பவுண்டரி லைனை மிதித்து இருந்தார்.  முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது மற்றும் அர்ஷ்தீப் சிங் முதுகில் காயத்தால் வெளியேறியதால், இந்திய அணியில் மூன்று மாற்றங்களைச் செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.


 



தென் ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நார்ட்ஜேவிற்கு பதிலாக ட்வைன் பிரிட்டோரியஸ் அணியில் இடம் பிடித்தார். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா ரிலீ ரோசோவின் சதம், குயின்டன் டி காக்கின் அரை சதம் மற்றும் டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் நல்ல பங்களிப்புகளின் உதவியுடன் 227 ரன்களை பதிவு செய்தது.  இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


மேலும் படிக்க | உலக கோப்பையில் இருந்து விலகிய பும்ரா! சிஎஸ்கே வீரருக்கு அடித்த லக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ