Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!
india vs srilanka 1st T20: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் 155 கிமீ வேகத்தில் பந்து வீசி ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்தார்.
india vs srilanka 1st T20: செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த 1வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி இலங்கைக்கு எதிராக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றதால், இந்திய அணி இந்த ஆண்டை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் அறிமுகமான சிவம் மாவி, நான்கு ஓவர்கள் ஒதுக்கீட்டில் 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மாவியின் அசத்தலான பந்து வீச்சால், 163 ரன்களை அடிக்க விடாமல் இலங்கையை பின்னுக்குத் தள்ளியது, அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் தலா ஒரு விக்கெட் எடுத்தார். அதுமட்டுமல்லாமல், முக்கியமான நேரத்தில் ஹசரங்காவின் விக்கெட்டையும் எடுத்தார்.
மறுபுறம் தனது வேகத்தால் ரசிகர்களை திகைக்க வைத்தார் உம்ரான் மாலிக். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்பெல்லின் போது, உம்ரான் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இது போட்டியின் வேகமான பந்தாகவும் இருந்தது. 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார். கவரில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
உம்ரானின் அபாரமான சாதனை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக வேகத்தை எட்டியதற்காக ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்தது. இதுவரை பதிவு செய்யப்பட்ட பும்ராவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ. அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டி20 போட்டி புனேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ