இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் 3வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்து இருந்தது.  இங்கிலாந்து அணி 118 ரன்களில் 9 விக்கெட்களை இழந்த போதிலும், கடைசி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் போராடியது.  சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை அணிக்கு சேர்த்தார்.  இருப்பினும், மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் ஆட்டமிழந்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி! இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை


தீப்தி ஷர்மாவின் இந்த ரன் அவுட்டை இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.  இது பொதுவாக 'மன்கட்' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தீப்திகு முழு ஆதரவு அளித்துள்ளார்.  தீப்தி பந்து வீசும் போது, சார்லோட் கிரீஸை விட்டு வெளியே வந்தார்.  உடனே தீப்தி ரன் அவுட் செய்ய, இதனை சரிபார்க்க ஆன்பீல்ட் அம்பயர்களால் மூன்றாம் நடுவருக்கு முடிவிற்காக அனுப்பப்பட்டது.  முடிவில் அவுட் என அம்பயரால் சொல்லப்பட்டது.


 



சமீபத்தில் ஐசிசி மாற்றிய புதிய விதிமுறைகளில் மன்கட் ரன் அவுட் முறை செல்லும் என்று கூறி இருந்தது.  ஐபிஎல் போட்டியில் கூட அஸ்வின் இதே முறையில் ரன் அவுட் செய்து இருந்தார்.  அந்த சமயத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது விதிமுறைகளில் ஒன்றாக உள்ளது.  தீப்திக்கு இந்திய ரசிகர்களிலும் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திகா? உலகக் கோப்பை XI-ல் யாருக்கு வாய்ப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ