Video: வெறுங்கையிலயா டாஸ் போட... காசை கொடுங்கப்பா - ஷிகர் தவானின் கலகல சம்பவம்
இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் போடும்போது கலகலப்பான சம்பவம் ஒன்று நடந்தது.
இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களை எடுத்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அந்த வகையில், இந்திய தென்னாப்பிரிக்கா போட்டி குறித்த வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். போட்டியின் நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், தொலைக்காட்சி வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேகர் ஆகியோர் முன்னிலையில் டாஸ் போட இந்திய கேப்டன் ஷிகர் தவான், தென்னாப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜ் வந்தனர்.
எப்போதும் போட்டியை நடத்தும் அணியின் கேப்டன்தான், டாஸ் போடும்போது, காயினை சுண்டிவிடுவார். அதற்கான காயினை போட்டி நடுவர்தான் அந்த அணியின் கேப்டனுக்கு வழங்க வேண்டும். டாஸ் போட அனைவரும் ஆயத்தமான நிலையில், இந்திய அணி ஷிகர் தவான் தன்னிடம் காயின் இல்லாததை உணர்ந்து, போட்டியின் நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் காயினை கேட்டார்.
மேலும் படிக்க | வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு - சிராஜ் அபாரம்!
காயினை ஷிகர் தவானிடம் தான் காயினை கொடுக்கவில்லை என்பதை ஸ்ரீநாத் அப்போதுதான் உணர்ந்தார். தொடர்ந்து, தனது பின்பாக்கெட்டில் வைத்திருந்த காயினை எடுத்து ஷிகர் தவானிடம் கொடுத்தார். இந்த சம்பவத்தின் வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளின்போது, டாஸ் போடும் வீடியோவை பிசிசிஐ பதிவிடுவது வழக்கம்.
பின்னர், டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேசவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து, பவுமா, ஷம்ஸி ஆகியோருக்கு பதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ன் ஃபார்டுயின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தற்போது, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது. ஷிகர் தவான் - சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ