Haris Rauf: ஹரீஸ் ரவூஃப் பிறந்த நாளில் பிராங் செய்த ஷாகீன் அப்ரிடி
ஹரீஸ் ரவுஃப் பிறந்த நாளில் ஷாகீன் அப்ரிடியும், சதாப் கானும் செய்த பிராங்க் வீடியோவை பிசிபி டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
Haris Rauf: பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் திங்கள்கிழமை தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அணியினருடன் இணைந்து அவருக்கு கேக் வெட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன் கூட்டணி போட்ட ஷாகீன் அப்ரிடியும், சதாப்கானும் ஹரீஸ் ரவுஃபை பிராங்க் செய்தனர். அதாவது, ஹரீஸ் ரவூஃப் பிறந்த நாளில் அவர் கேக் வெட்ட வேண்டிய நிலையில், சதாப்கான் கேக் வெட்டி கிண்டலடித்தனர்.
மேலும் படிக்க | T20 Worldcup 2022: அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
ஷாகீன் - சதாப் குறும்பு
இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யூ டியூப்பில் பகிர்ந்துள்ளது. அதில் மேத்யூ ஹைடன் உள்ளிட்ட அணி வீரர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது வரும் ஷாகீன் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் ஹரீஸ் ரவூஃபை கேக் வெட்ட விடாமல் அவரை ஓரமாக ஒதுங்கி நிற்க வைக்கின்றனர். இதனால் ஓரமாக நிற்கும் அவர், ஷதாப்கான் கேக் வெட்டும் வரை அமைதியாக நின்று கைதட்டுகிறார்.அவர்களின் இந்த கிண்டல் குறும்பு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ஹரீஸ்
இதுவரை டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 20.50 வைத்திருக்கிறார். ஹரிஸ் 6.83 என்ற எக்னாமி இருந்தாலும், ஒட்டுமொத்தமாக மிக அபாயகரமான பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசு கடும் நெருக்கடி கொடுத்தார்.
மேலும் படிக்க | கழட்டிவிடும் டெல்லி... மீண்டும் சிஸ்கேவுக்கு வரும் Lord - தோனி போடும் புதுகணக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ