ஸ்டேடியத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய மழை! - கொந்தளிக்கும் ரசிகர்கள்- வீடியோ
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டி- 20 போட்டியின்போது ஸ்டேடியத்தின் கூரையைப் பிளந்துகொண்டு மழை நீர் கொட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
முன்னதாக நடந்த முதல் 4 போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றதால் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படவிருந்தது. இதனால் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் போட்டி நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இரு அணிகளும் விளையாட தயார் ஆன நிலையில், மற்றொரு புறம் மழை விளையாடத் தொடங்கியது. மழை வெளுத்து வாங்கியதால் தாமதமாகப் போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை தாண்டவம் ஆடியதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு கோப்பை அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | என்னது, ரஜினியின் ஜெயிலர் போஸ்டரே காப்பியா?! நெட்டிசன்ஸிடம் சிக்கிய நெல்சன்!
இந்நிலையில், மழையின்போது பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தின் ஒரு பகுதி மேற்கூரையை உடைத்துக்கொண்டு மழை நீர் கொட்டியது. இருக்கைகளின்மீது மழை கொட்டியதால் அமர முடியாமல் ரசிகர்கள் திண்டாடினர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
டிக்கெட் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் மைதான நிர்வாகம், சாதாரண மழைக்குக்கூட தாங்காத அளவுக்கா அரங்கத்தை வைத்திருப்பது என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR