ஷாட் தேர்வு குறித்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்துடன் (Rishabh pant) பேச வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்ல் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இந்த தோல்வி குறித்து டிராவிட் கூறுகையில், "இரண்டாவது இன்னிங்ஸில் பந்த் தனது விக்கெட்டைத் தூக்கி குடுத்துவிட்டு வந்தார்.  ரிஷப் ஒரு திறமையான வீரர் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் அவர் அவருக்கான ஒரு பாணியில் விளையாடுகிறார், அது அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தள்ளிப்போகிறதா ஐபிஎல் ஏலம்? புதிய அணிகளின் நிலைமை என்ன?


ஆனால் தற்போது அவருடைய ஷாட் செலெக்சன் குறித்து அவருடன் நிச்சயமாக பேச வேண்டி உள்ளது.  ரிஷப் பந்தை யாரும் நிதானமாக விளையாட சொல்லபோவதில்லை.   சில சமயங்களில் அது அணிக்கு தேவைப்படுகிறது.  மைதானத்திற்குள் வந்தவுடன் சிறிது நேரம் எடுத்து பிறகு அதிரடியாக ஆடலாம்.  பந்தின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.  ஒரு போட்டியின் முடிவை மாற்றி அமைக்கும் திறமை அவரிடம் உள்ளது.  அதிரடியாக விளையாட எது சரியான நேரம் என்பதை உணர வேண்டும், அதனை ரிஷப் கற்றுக்கொண்டு வருகிறார்" என்று கூறினார்.



தென்னாபிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தார். மழை குறுக்கீட்டிற்குப் பிறகு, 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா 118/2 என்று இருந்த நிலையில் சிறப்பாக விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.  இது குறித்து ட்ராவிட் கூறுகையில், " டீன் எல்கர் நன்றாக விளையாடினார், அனைவரும் அவருக்கு பாராட்டை தெரிவிக்க வேண்டும்.  அவரது விக்கெட்டை எடுக்க முயற்சித்தோம், ஆனால் அது நடக்கவில்லை.



இறுதி நாளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், எட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நாங்கள் உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிந்துதான் களமிறங்கினோம். அவுட்ஃபீல்ட் ஈரமாக இருந்தது, பந்து ஈரமாகப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை கொடுக்க இருந்தோம், ஆனால் சவுத் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடியது" என்று கூறினார்.


ALSO READ | INDvsSA Test: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி..! தனி ஒருவன் ’டீன் எல்கர்’


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR