இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் (Johannesburg) நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3வது நாளில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ALSO READ | மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா - சிக்கலில் பிக்பாஸ் T20 லீக்?
இதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்திருந்தது. மார்க்ரான் 31 ரன்களுக்கும், பீட்டர்சன் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் சிறிது நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், 46 ரன்களுடன் களத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர், இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது விக்கெட்டை இந்திய வீரர்களால் எடுக்க முடியவில்லை. 96 ரன்கள் எடுத்த டீன் எல்கர் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ALSO READ | WTC Table: டாப் 5-ல் வங்கதேசம், SA -ன் பரிதாபநிலை..! அப்போ இந்தியா?
மறுமுனையில் 40 ரன்கள் எடுத்த நிலையில் வான்டர் டசன் அவுட்டானார். அவருக்கு பிறகு களமிறங்கிய பவுமாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர். ஜோகனஸ்பெர்க்கில் இந்திய அணியை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையை டீன் எல்கர் படைத்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR