மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா உடல் நலக்குறைவு காரணாமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு இந்திய  தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பிரைன் லாரா தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறப்பு பேச்சாளாராக தனியார் தொலைக்காட்சிக்கு பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் தற்போது நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.


விரைவில் அவரது உடல்நலன் குறித்து அறிக்கை வெளியாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


90-களில் சச்சினுக்கு இணையாக பேட்டிங்கில் புகழப்பட்டவர் லாரா தற்போது தனது 47-வது வயதை கடந்துள்ளார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார் லாரா.


இதுவரை அவர் விளையாடிய 131 டெஸ்ட் போட்டிகளில் 52.88 சராசரியுடன் 11,953 ரன் குவித்துள்ளார். இதில் 34 சதமும், 48 அரை சதமும் அடங்கும். அதேப்போல் 299 ஒரு நாள் போட்டியில் பங்கேற்றுள்ள லாரா சராசரி 40.48-ல் 10,405 ரன் எடுத்துள்ளார். இதில் 19 சதமும், 63 அரை சதமும் அடங்கும்.


தனி மனிதனாக டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் எடுத்தவர் என்னும் பெருமையை பெற்ற லாராவின் சாதனை இதுநாள் வரையிலும் யாராலும் முறியடிக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.