T20 World Cup 2022: 2 சாம்பியன் வீரர்களை தூக்கிப்போட்ட வெஸ்ட் இண்டீஸ்; உலகக்கோப்பை அணி அறிவிப்பு
20 ஓவர் உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாம்பியன் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
நிக்கோலஸ் பூரன் கேப்டன்
26 வயதான விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோவ்மேன் பவல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் பங்கேற்ற அதே வீரர்களையே இந்த அணி பெரும்பாலும் கொண்டுள்ளது. எவின் லூயிஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். லூயிஸ் டி20 உலகக் கோப்பை-2021-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். இதுவரை அணியில் இடம்பெறாத இரண்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லெக் ஸ்பின்னர் யானிக் கரியா மற்றும் ஆல்-ரவுண்டர் ரமோன் ரெஃபர் ஆகியோர் முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ரசல் - நரேன் இடம் பெறவில்லை
நட்சத்திர வீரர்களான ஆல்-ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை. 34 வயதான ரசல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 67 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதிரடி மன்னன் என அழைக்கப்படும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இதேபோல் சுனில் நரைனும் நட்சத்திர வீரராக இருப்பவர். இருவரையும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறாததால், அவர்களின் சர்வதேச 20 ஓவர் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
மேலும் படிக்க | தோனி செய்ததைபோல் ரோகித் செய்ய வேண்டும்; வாசிம் ஜபார் கேட்பது இதுதான்
இருமுறை கோப்பையை வென்ற அணி
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐசிசி நடத்தும் 20 ஓவர் உலகக்கோப்பையை இரண்டு முறை வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகக்கோப்பையையும், 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையையும் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இந்த முறை உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு அந்த அணி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. மேலும், உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் இந்த வடிவத்தில் பழம்பெரும் அணியாக கருதப்படுகிறது. ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே அணி இதுவாகும். அந்த அணி 2012ஆம் ஆண்டு இலங்கையிலும், 2016ஆம் ஆண்டு இந்தியா நடத்திய இந்த உலகப் போட்டியிலும் கோப்பையை வென்றது. இந்த முறை டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றுக்கான அணிகளில் இடம்பிடிக்க விண்டீஸ் அணி போராட வேண்டியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஒபேட் மெக்காய், ராமென் ரெஃபர், ஓடியன் ஸ்மித்.
மேலும் படிக்க | விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள்! முன்னாள் வீரர் கருத்தால் சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ