சர்வதேச 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் களமிறங்கிய இந்திய அணி, இந்த முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. ஆசிய கோப்பையை வெற்றி பெற்று அதே உற்சாகத்துடன் 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவி பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
கோப்பையை வெல்வதற்கு ஒரு விழுக்காடுகூட வாய்ப்பு இல்லாத அணி என கருதப்பட்ட இலங்கை அணி, ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாடம் இது. எச்சரிக்கையோடு விளையாடியிருந்தால் கோப்பையை வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பிலும், இலங்கை அணியை இலகுவாக எடுத்துக் கொண்டதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பாடத்துடன் உலகக்கோப்பையில் இந்திய அணி இப்போது களமிறங்க உள்ளது.
அதேநேரத்தில், பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட வீரர்கள் குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதேதவறுகளை உலகக்கோப்பையில் செய்யக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில், ரிஷப் பன்டை ஓபனிங் இறக்குவது குறித்து ரோகித் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோனி, ரோகித் சர்மாவுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு கொடுத்ததுபோல், இப்போது ரோகித் சர்மா, ரிஷப் பன்டிற்கு ஓபனிங் இறக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரிஷப் பன்டின் பேட்டிங் மாறவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணிப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை வென்று என்ன யூஸ்? உலக கோப்பைக்கு தகுதி பெறாத இலங்கை!
மேலும் படிக்க | மூன்று தொடர்களுக்கான இந்திய அணியின் முழு விவரம்! எந்த எந்த வீரர்கள் இல்லை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ