கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த விராட் கோலி, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தனக்கு தோனி மட்டுமே மெசேஜ் செய்ததாகவும், மற்ற வீரர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். அவரின் அந்த பேட்டி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சுருக்கென சூடாக பதில் அளித்துள்ளார். கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவருக்கு எதற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்? அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? கேப்டன் பதவியில் இருந்து விலகியவிருக்கு என்னமாதிரியான ஊக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்? என சரமாரியாக கவாஸ்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இதை செய்தால் மட்டுமே இந்தியாவால் ஆசிய கோப்பை பைனலுக்கு தகுதி பெற முடியும்!


கேப்டன் பதவியில் இருந்து விலகிய நீங்கள், உங்களின் முழு திறமையையும் இப்போது கிரிக்கெட்டில் காட்டுங்கள். மற்ற வீரர்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருக்க தேவையில்லை. உங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் எனவும் விராட் கோலிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதற்கு உதாரணமாக தன்னுடைய கேப்டன்சி ராஜினாமா குறித்து பேசியிருக்கிறார். 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு கேப்டன்சியில் இருந்து விலகினேன். அப்போது அனைத்து வீரர்களுடன் மீண்டும் இணைந்து விளையாடினேன். எங்களுக்குள் இருந்த தோழமையில் எந்த விரிசலும் இருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து ஒன்றாக விளையாடினோம். 


பார்மில் இல்லாதபோது தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அதற்கு நீங்கள் தயாராக முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கும், கவாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். இதற்கு முன்னரும் விராட் கோலியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர், மனைவியை பற்றியும் பொதுவெளியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கடுமையான முறையில் தங்களின் பதிலடியை கொடுத்தனர். அதனை மனதில் வைத்து மீண்டும் விராட் கோலியை சீண்டியிருக்கிறார் கவாஸ்கர். 


மேலும் படிக்க | இந்த வீரரை கவனிக்காத இந்திய அணி: ரோகித் இடம் கொடுக்காதது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ