Pakistan Vs Afghanistan: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக சர்வதேச அளவில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது அவர்களின் இரண்டாவது வெற்றியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டையை கிளப்பிய ஆப்கன்


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி 10ஆவது இடத்தை பிடித்துள்ளது. 


நேற்றைய பாகிஸ்தான் போட்டியை வெல்ல ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தார். அந்த அணியில் நேற்று முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர்-ரஹ்மான், நூர் அகமது என நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடினர். அவர் 38 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 176 ரன்களை மட்டுமே கொடுத்தனர். முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்தது. பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்தார்.


மேலும் படிக்க | சேப்பாக்கம்னா கெத்துதான்... நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள் - உணர்ச்சி பெருக்கில் ஆப்கான்


உருக்கமாக பேசிய இப்ராஹிம் சத்ரான்


ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. அந்த அணியின் ஓப்பனர்கள் இப்ராஹிம் சத்ரான் 87, குர்பாஸ் 65 ரன்களை குவித்து சூப்பரான தொடக்கத்தை அளித்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி இருவரும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றனர். இதில் ரஹ்மத் 77 ரன்களையும், ஷாஹிடி 48 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் சத்ரான் (Ibrahim) வென்றார். 


ஆட்ட நாயகன் விருதை பெறும்போது அவர் கூறுகையில்,"எனக்காகவும் எனது நாட்டிற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு (ஆப்கன் அகதிகள்) அர்ப்பணிக்க விரும்புகிறேன்" என்றார். இந்நிலையில் சத்ரான் எதுகுறித்து பேசுகிறார் என்ற கேள்வி இருந்தது. அதனை அறியாதவர்கள் பின்வரும் தகவல்கள் மூலம் அதனை தெரிந்துகொள்ளலாம்.



ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் நடப்பது என்ன?


கடந்த அக்டோபர் 21 அன்று ஒரே நாளில் 3,248 ஆப்கானிஸ்தான் அகதிகள் (Afghanistan Refugees) பாகிஸ்தானில் இருந்து அவர்களின் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் வானொலியில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆவணமற்ற அகதிகளை வெளியேற்றுவதற்கான காலக்கெடு அறிவிக்கப்பட்டதில் இருந்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது என்பது நினைவுக்கூரத்தக்கது. 


பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளவர்களுக்கு மட்டுமே எல்லைக் கடக்க முடியும் என்ற அரசின் கட்டுப்பாடு வரும் நவம்பர் 1ஆம் முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் பிறகு, ஆவணங்கள் அற்ற புலம்பெயரும் அகதிகள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையை யாரும் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது. பாகிஸ்தானிய அடையாள அட்டை அல்லது ஆப்கானிய அனுமதி கட்டாயமாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.73 மில்லியன் ஆப்கானியர்களுக்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பாண்டியா வந்தாலும் இவரை விட்டுறாதீங்க... உலகக் கோப்பையை வெல்ல அவர் ரொம்ப முக்கியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ