இப்படி ஆடுனா அரையிறுதி எங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் - ஜோஸ் பட்லர் விரக்தி

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்விக்குப் பிறகு பேசும்போது, நடப்பு உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 22, 2023, 01:04 PM IST
  • அரையிறுதிக்கு முன்னேறுவது கொஞ்சம் கஷ்டம்
  • இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் விரக்தி
  • புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது
இப்படி ஆடுனா அரையிறுதி எங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் - ஜோஸ் பட்லர் விரக்தி title=

உலக சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணி படுமோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த அந்த அணிக்கு அடுத்த அடியாக தென்னாப்பிரிக்கா அணியுடன் படுதோல்வி பரிசாக கிடைத்திருக்கிறது. பேட்டிங், பவுலிங் எல்லாம் கத்துக்குட்டி அணிகளுக்கு இணையாக செய்து கொண்டிருக்கிறது இங்கிலாந்து அணி. அந்த அணி ஆடுவதை பார்த்தால் ஒரு நடப்பு சாம்பியன் போன்ற எண்ணமே ரசிகர்களுக்கு வருவதில்லை. முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக தர்ம அடி வாங்கியது இங்கிலாந்து. 50 ஓவர்களில் 282 ரன்கள் அடித்ததை நியூசிலாந்து அணி வெறும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து சேஸிங் செய்தது.

மேலும் படிக்க | IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கடைசி நேரத்தில் வரப்போகும் மாற்றம்! இந்த வீரர் சந்தேகம் தான்

அப்போதே தெரிந்துவிட்டது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு லட்சணம். அடுத்த போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சேஸிங்கில் கோட்டைவிட்டது. 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சியை கொடுத்தது. நியூசிலாந்து அணியுடன் தோற்றதைக் கூட ஒப்புக் கொள்ளலாம். ஏனென்றால் கடந்த உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு வந்த அணி, ஒருநாள் போட்டியில் வலுவான அணி என்கிற வகையில். ஆப்கானிஸ்தானுடனான தோல்வி என்பதெல்லாம் பவுலிங் படுமோசமாக இருப்பதைப் போலவே பேட்டிங்கிலும் உத்வேகம் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இந்த மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் இன்னும் பட்டவர்த்தனமாக தெரிந்தது. அதனால் தான் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 399 ரன்களை குவித்தது. இப்போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பதெல்லாம் இங்கிலாந்துக்கு மிகமிக மோசமான தோல்விகளில் ஒன்று. இந்த போடியில் மிடில் ஓவர்களை வீச இங்கிலாந்து அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதையும் பார்க்க முடிந்தது. மொயீன்அலி போன்ற தரமான ஆல்ரவுண்டரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்காமல் வாட்டர் பாயாக இங்கிலாந்து பயன்படுத்தியதற்கான விலையை தென்னாப்பிரிக்கா போட்டியில் கொடுத்தது அந்த அணி. 

போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும், தங்களின் மோசமான விளையாட்டை ஒப்புக் கொண்டதுடன் இப்படியே விளையாடியனால் உலக கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை நினைத்துகூட பார்க்க முடியாது என்ற சோக கதையையும் வாசித்துவிட்டார். மற்றவர்கள் சொல்வதற்கு முன்பு நாமே முந்திக் கொள்ளலாம் என அவர் நினைத்திருக்கலாம். இப்பவும் கூட இங்கிலாந்து அணி தோல்விப் பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பினால் அரையிறுதிக்கு செல்ல முடியும். ஆனால் இங்கிலாந்து அணி அதனை செய்யுமா? என்பது தான் கேள்வி. உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து.

இது குறித்து விளக்கம் அளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், நாங்கள் மோசமான நிலையில் தான் இருக்கிறோம். ஆனால் எங்கள் பிழைகளை திருத்திக் கொண்டு நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடுவோம். வெற்றிப் பாதைக்கு இங்கிலாந்து அணி வரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். அவரின் நம்பிக்கை வார்த்தைகள் ரிசல்டில் வருமா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | IND vs NZ: தர்மசாலாவில் டாஸ் ஜெயித்தால் ரோகித் சர்மா என்ன செய்யணும்? சேஸிங் செய்யலாம் - ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News