ENG vs NZ டி20 உலகக் கோப்பை 2021 முதல் அரையிறுதியை எப்போது, எங்கு பார்க்கலாம்?
இங்கிலாந்து vs நியூசிலாந்து கிரிக்கெட் ஸ்கோர்: முதல் அரையிறுதியில், குரூப்-1 (இங்கிலாந்து) முதலிடம் பிடித்த அணி, குரூப்-2 தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்த அணியுடன் (நியூசிலாந்து) மோதும்.
இங்கிலாந்து vs நியூசிலாந்து கிரிக்கெட் ஸ்கோர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் (ICC ODI World Cup Final 2019), இதே இரண்டு அணிகள் மோதின. அதன்பிறகு, மற்றொரு ஐசிசி-யின் முக்கியப் போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்கும் நியூசிலாந்தின் அணியின் மனதில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி காட்சி நிச்சயமாக இருக்கும்.
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றில், இங்கிலாந்து 5 ஆட்டங்களில் 4 வெற்றி பெற்று குரூப்-1 இல் முதலிடத்தைப் பிடித்தது. நியூசிலாந்து அணி 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்றாலும், குரூப்-2 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது.
இப்போது விதிகளின்படி, முதல் அரையிறுதியில், குரூப்-1 (இங்கிலாந்து) முதலிடம் பிடித்த அணி, குரூப்-2 தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்த அணியுடன் (நியூசிலாந்து) மோதும். அந்த வரிசையில், இன்று முதல் அரையிறுதியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து (England vs New Zealand) அணிகள் மோதுகின்றன.
ALSO READ | அரையிறுதியில் களமிறங்கும் 4 அணிகள்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இங்கிலாந்து-நியூசிலாந்து அரையிறுதியை எப்போது, எங்கு பார்க்க முடியும்?
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 2021 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 10 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை 2021 முதல் அரையிறுதி ஆட்டம் எப்போது நடைபெறும்?
டி20 உலகக் கோப்பையின் (ICC T20 World Cup 2021) முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்திய நேரப்படி இங்கிலாந்து vs நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்திய நேரப்படி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப்போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு நடைபெறும்.
ALSO READ | சாதனை படைத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி! ஸ்டார் இந்தியா வெளியிட்ட தகவல்!
அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் பார்க்க முடியும்?
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி எச்டியில் புதன்கிழமை ஒளிபரப்பப்படும்.
இங்கிலாந்து vs நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை எங்கு பார்க்கலாம்?
ஐசிசி டி-20 உலகக் கோப்பை 2021 இல் இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் (Disney + Hotstar) ஆன்லைனில் பார்க்கலாம்.
ALSO READ | ரோஹித் சர்மா தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR