IND vs ENG: டி 20 தொடர் யாருக்கு? இந்தியாவுக்கு முக்கியமான நான்காவது போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND vs ENG) இடையே இன்று நான்காவது டி20 போட்டி நடைபெற உள்ளது. வலிமைமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
India vs England 4th T20I: இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND vs ENG) இடையே இன்று நான்காவது டி20 போட்டி நடைபெற உள்ளது. வலிமைமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியில் வென்று விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய முயற்சிக்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் 4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குவார்கள்.
கடந்த செவ்வாயன்று 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸின் பேட்ஸ்மேன்-விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 83 ரன்கள் எடுத்ததற்காக "ஆட்டநாயகன் விருது" அவருக்கு கொடுக்கப்பட்டது. தோல்வியை தழுவிய இரண்டு ஆட்டங்களில் டாப் ஆர்டரில் களம் இறங்கும் வீரர்கள் சரியாக விளையாடவில்லை. இதை சரிசெய்து, சில யுத்திகளை பின்பற்றி, இந்த இருபது ஓவர் தொடரில் மீண்டும் இந்தியா அணி வர வேண்டும்.
ALSO READ | ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா?
தற்போது ஐசிசி டி 20 தரவரிசையில் (ICC T20 Ranking) இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா 276 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி 276 புள்ளிகளுடன் உள்ளது. எனவே அகமதாபாத்தில் நடைபெறும் இன்றைய போட்டியான நான்காவது டி 20 போட்டியை (4th T20I) இந்தியா இழந்தால், ஒரு புள்ளியை இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். ஒருவேளை இங்கிலாந்து தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து முதல் இடத்தில் தான் இருக்கும்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது டி 20 ஐ மார்ச் 18 வியாழக்கிழமை (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் (Narendra Modi Stadium) நடைபெறுகிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது டி 20 ஐ போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports Network) நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். அதேபோல ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அணி விவரங்கள்:
இந்தியா: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பந்த், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஷார்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சாய்னி, அக்ஷகர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் தவதியா, டி நடராஜன், இஷான் கிஷன், ராகுல் சாஹர்.
ALSO READ | Road Safety World Series: மீண்டும் Yuvraj Singh கலக்கல், ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்!
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சாம் பில்லிங்ஸ், ரீஸ் டோப்லி, மார்க் வூட், டாம் குர்ரன், லியாம் லிவிங்ஸ்டன்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR