#INDvNZ இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது யாருக்கு சாதகம்..!! ஒரு அலசல்
ஒருவேளை தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், எந்த அணிக்கு அதிக சாதகம் என்று பார்போம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த, இன்றைய போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 18வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோத இருந்தன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க வேண்டி இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் ஆரம்பமாவதில் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
மழையின் காரணமாக இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை. ஒருவேளை மழை பெய்வது நின்றுவிட்டால், 50 ஓவருக்கு பதிலாக குறைந்த ஓவரில் ஆட்டம் ஆரம்பமாகும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்தால் ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்ப்படும். அப்படி ஒருநிலை ஏற்பட்டால், எந்த அணிக்கு அதிக சாதகமாக இருக்கு என்று பார்ப்போம்.
ஒருவேளை தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், எந்த அணிக்கு அதிக சாதகம் என்று பார்த்தால், அது நியூசிலாந்து அணிக்கு தான் இருக்கும். ஏனென்றால் அந்த அணி இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு வேலை இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் முதலிடத்தை இழக்க நேரிடும். அல்லது ஆட்டம் கைவிடப்பட்டால், நியூசிலாந்து அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். அதன் மூலம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்குக்கொள்ளும். அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
அதேபோல இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றியை பெற்றுள்ளது. இன்னும் நான்கு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஆனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் கைவிடப்பட்டாலோ, இந்திய அணி குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக வேண்டும். ஒரு வேலை தோல்வி அடைந்தால், இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பதற்றத்துடன் ஆட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 முறை இந்தியாவும் 4 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்தும் 45 முறையும் வெற்றி பெற்றுள்ளன.