புதுடெல்லி: முத்திரை பதித்த பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.  விளையாட்டுத் துறை நாயகர்களை வெள்ளித் திரையில் காண்பது அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுவது. ஆனால், இதுவரை சில வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை தான் திரைப்படமாகி இருக்கிறது. பல முயற்சிகள் பரிசீலனையில் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, இந்திய சதுரங்க விளையாட்டில் முடிசூடா அரசராக திகழும் விஸ்வநாதன் ஆனந்த்தை (Viswanathan Anand) வெள்ளித்திரையில் பார்க்க முடியாவிட்டாலும், அவரது வாழ்க்கையை திரைப்படமாக பார்க்கலாம். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கையை திரைப்படமாக ஆவனப்படுத்த வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கிறது., அந்த விருப்பத்தை நனவாக்கும் சந்தர்ப்பம் தற்போது சாத்தியமாகியிருக்கிறது. 


சுண்டியல் என்டர்டெயின்மென்ட் (Sundial Entertainment) தயாரிக்கவுள்ள விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் (Aanand L Rai) இயக்குகிறார். 'தனு வெட்ஸ் மனு', 'ஜீரோ' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய்.  விஸ்வநாதன் ஆனந்த்தின் (Viswanathan Anand) வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து பலர் அவரை அணுகியுள்ளனர். ஆனால் விஸ்வநாதன் ஆனந்த் இதுவரை யாருக்கும் திரைப்படம் எடுக்கும் அனுமதியை வழங்க மறுத்துவிட்டார். இப்போதுதான் காலம் கனிந்துள்ளது. செஸ் உலக ஜாம்பவான் தமிழர் ஆனந்த், தனது வாழ்க்கையை திரைப்படமாக்க ஒப்புதலைக் கொடுத்திருக்கிறார்.


Also Read | Instagram பட்டியலில் 25வது இடம் விராட் கோலி, அனுஷ்கா 24 வது இடத்தில்...
 
தற்போது பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் என இதுவரை எந்த தேர்வும் இறுதி செய்யப்படவில்லை. தயாரிப்புக் குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் 2021 ஆம் ஆண்டில் வெளிவரலாம். செஸ் (Chess) பிரபலம் ஆனந்தின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் இந்த திரைப்படம், அவரது குழந்தை பருவம் முதல்  மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக செஸ் உலகில் அவரது ஆளுமையை விரிவாகப் பேசும்.  


ஆனந்த் இந்திய விளையாட்டு ஐம்பவான்களில் ஒருவர். பல இந்திய பிரபல வீரர்களின் வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டன. கடந்த காலங்களில் வாழ்க்கை வரலாறு தயாரிக்கப்பட்டது. மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), முகமது அசாருதீன் (Mohammed Azharuddin), மில்கா சிங் (Milkha Singh),  மேரி கோம் (Mary Kom) என பலரின் வாழ்க்கையை நாம் திரைப்படமாக வெள்ளித்திரையில் கண்டு ரசித்திருக்கிறோம். தற்போது, சாய்னா நேவால், அபிநவ் பிந்த்ரா, பி.வி.சிந்து என இன்னும் சில பிரபலங்களின் வாழ்க்கையும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.


Also Read | cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR