இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால், எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணிக்காக ரஜத் படிதார் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் தொப்பியை கொடுத்து அணிக்குள் வரவேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!


அதே நேரத்தில் இளம் வீரர் சர்ப்ராஸ்கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உள்ளூர் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ரெக்கார்டு வைத்திருக்கும் சர்ப்ராஸ் கான் தொடர்ச்சியாக இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இது தொடர்பாக பலமுறை விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த சூழலில் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருந்த போதும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் ரசிகர்கள் சர்பராஸ் கானை அணியில் சேர்க்க முடியாததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். 



இதுவரை 45 முதல் தர போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் 69.85 சராசரியில் 3912 ரன்கள் எடுத்துள்ளார் சர்பிராஸ் கான். அதே நேரத்தில், அவர் 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் 34.94 சராசரியில் 629 ரன்கள் எடுத்துள்ளார். சர்பராஸ் 96 டி20 போட்டிகளில் 22.41 சராசரியில் 1188 ரன்கள் எடுத்துள்ளார். சர்பிராஸ் கானுக்கு நடப்பது போலவே சஞ்சு சாம்சனுக்கும் ஆரம்ப காலத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்படாமலேயே இருந்து, தற்போது அவருடைய சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதேநிலையில் தான் சர்பிராஸ் கானும் இருக்கிறார். 


விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விளையாடும் 11: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.


மேலும் படிக்க | Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா...? சகோதரர் அளித்த விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ