இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நான்காம் நாள் ஆட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது, ஆட்டத்தை ட்ராவ் செய்யும் முனைப்பில் இலங்கை நிதானமாக விளையாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டி ஜூலை 3 ஆம் தேதி காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5209/2 என்ற நிலையில் இருந்தது.


இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. துவங்கியது முதலே இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 


இலங்கை அணியின் திமுத் கருணரத்னே நிதானமாக விளையாடி தன சதத்தினை பூர்த்தி செய்தார். அவருடன் கைகோர்த்து மேதிவ்ஸ் நிதானமாக விளையாடி வருகிறார்.


தற்போதய நிலவரப்படி இலங்கை அணி 92 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.


கருணரத்னே 138(294) மற்றும் மேதிவ்ஸ் 29(53) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


இந்தியாவின் ரன்களை சமன் செய்ய இலங்கை இன்னும் 134 ரன்களை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.