இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.


இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த மைதானம் பந்துவீச்சாளருக்கு சாதகமான மைதானமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்போட்டியில் காயம் காரணாமக ரோஹித் சர்மா, பிரித்வி ஷா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 



இன்று களம் காணும் வீரர்கள்...


இந்திய அணி: முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்


ஆஸ்திரேலியா: ஷேன் மார்ஷ், பீட்டர் ஹென்ட்ஸ்காப், டிராவிஸ் ஹெட், டிம் பெயின் (கேட்ச்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹாஸ்லேவுட், மிட்செல் மார்ஷ், பீட்டர் சிடில், கிறிஸ் டிரெமெய்ன்.