இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா?
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என சந்தேகம் எழுந்துள்ளது
தென் ஆப்பிரிக்காவில் 'ஒமிக்ரான்' என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸானது அதிக வீரியத்துடனும், வேகமாகவும் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற போகும் விளையாட்டு போட்டிகளுக்கு இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தலால் பாதிப்பு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்குபெற சென்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணியினர், இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் ரத்து செய்து விட்டு அவர்களது நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ 71வது சதத்திற்காக கடுமையான பயிற்சியில் விராட் கோலி!
நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட உள்ளது. 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆனால், இந்த தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியண்டான ஓமிக்ரான் என்ற புதிய மாதிரி வைரஸ் உலகளவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இருந்த வேரியண்டுகளைக் காட்டிலும் மிக வேகமாக பரவும் இந்த வைரஸ், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான பயணத்தை ரத்து செய்திருப்பதுடன், அங்கிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கான பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து தடை குறித்து ஆலோசித்து வருகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கான பரிசோதனையையும் விமான நிலையங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தலான சூழலில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா பயணத்தை மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து பிசிசிஐ மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
ஒருவேளை பிசிசிஐ கலந்தாலோசித்தால், மத்திய அரசின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்படும் எனத் தெரிவித்த அனுராக் தாக்கூர், வீரர்களின் நலன் சார்ந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால், பிசிசிஐ இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியையும் வெளியிடவில்லை. தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய ஏ அணி தொடர்ந்து அந்நாட்டு ஏ அணியுடனான போட்டிகளில் பங்கேற்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு வீரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளை ஐசிசி தற்காலிமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜிம்பாபேவில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதால், அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு தகுதிச் சுற்றுப் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் போட்டி குறித்த அட்டவணைப்படி, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையிலான போட்டி டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று ஜோஹன்சபர்க்கில் தொடங்குகிறது. இந்த புதிய வைரஸ் வடக்கு தென்னாப்பிரிக்காவில் தான் காணப்படுகிறது, அதனால் விளையாட்டு நடக்கும் இடங்களான ஜோஹன்சபர்க் மற்றும் செஞ்சூரியன் ஆகிய இடங்கள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இறுதி முடிவினை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ இந்தியா VS நியூசிலாந்து; அஸ்வின் மாயாஜாலம், வில்லியம்சன் அவுட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR