திலக் வர்மாவுக்கு அடுத்த போட்டியில் இடம் கிடைக்குமா?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் மெதுவாக விளையாடிய திலக் வர்மாவின் இடம் விராட் கோலி வருகையால் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஓபனிங் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார். ஆனால், திலக் வர்மா நிதானமாக பேட்டிங் ஆடி 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மாவின் இந்த நிதானமான ஆட்டம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கண்டனத்தை பெற்றது. முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 158 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, திலக் வர்மாவின் நிதானமான ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை கொஞ்சம் சவாலா சூழலுக்கு திலக் வர்மாவின் பேட்டிங் தள்ளியது.
மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கை வைத்து இந்திய அணியை சாய்க்க பிளான்..! இங்கிலாந்து பலே திட்டம்
இருப்பினும், விக்கெட் விழுந்த சமயத்தில் அவர் நிதானமாக ஆடியது ஏற்றுக் கொள்ள கூடியது தான். இதை பெரியளவுக்கு குறை சொல்லுமளவுக்கு அல்லது மோசமான பேட்டிங் என முத்திரை குத்துமளவுக்கு எல்லாம் இல்லை. ஆனால், அவருடைய இடம் கேள்விக்குள்ளாவதற்கு ஒரே காரணம் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாமல் இருந்த விராட் கோலி, 2வது 20 ஓவர் போட்டியில் களம் காண இருக்கிறார். அதனால், திலக் வர்மாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆனால், திலக் வர்மா ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதை மறுக்க முடியாது. அவர் ஏற்கனவே ஐபிஎல் மற்றும் சர்வதே ச டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இந்திய அணிக்காக ஆடிய முந்தைய போட்டிகளிலும் சரி, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கியபோதும் சரி, அவரின் ஆட்டம் மெச்சத் தகுந்த அளவிலேயே இருந்திருக்கிறது. அதனால் அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. விராட் கோலி வரும்பட்சத்தில் வேறு பிளேயர்கள் வேண்டுமானாலும் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயத்தில் திலக் வர்மா இன்னும் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இடத்திலேயே இருக்கிறார். திலக் வர்மா அடுத்த போட்டியில் அதிரடி காட்டினால், அவர் அணியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், சஞ்சு சாம்சன் அல்லது வேறு ஏதேனும் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க | இஷான் கிஷன் பார்ட்டியில் கலந்து கொண்டதால் கழற்றிவிடப்படவில்லை - டிராவிட் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ