உலக கோப்பை பைனல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?
உலக கோப்பை டி20 பைனல் போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது.
உலக கோப்பை டி20 2021 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று, பின்பு சூப்பர் 12 அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் குரூப் Bயில் இடம்பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்ற நிலையில், இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இரண்டு அணிகளுமே தங்களது முதல் உலக கோப்பையை கைப்பற்ற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். லீக் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 5 போட்டியில் விளையாடி அதில் 4 போட்டியில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஒரே ரன் ரேட்டிலும் உள்ளனர். அதே போல், அரையிறுதி போட்டியில் இரண்டு அணிகளும் இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளனர். இதில் சுவாரசியம் என்ன வென்றால், இரண்டு அணிகளும் 19வது ஓவரில் ஒரே போல் 5 விக்கெட்கள் மீதம் இருக்க வெற்றி பெற்றன.
பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசலாந்து அணிகள் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஒருபுறம் ட்ரெண்ட் போல்ட், மறுபுறம் ஸ்டார்க் வேகத்தில் மிரட்ட உள்ளனர். உலக கோப்பை டி20 பைனல் போட்டிக்கு முதல் முறையாக நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. 50ஓவர் உலக கோப்பை பைனலில் தோல்வி அடைந்ததால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்போடு களம் இறங்க உள்ளது. 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பைனல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்த முறை கோப்பையை வெல்ல முழுமூச்சுடன் உள்ளது. இரண்டு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இன்றைய போட்டியில் விருவிருப்பிர்க்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இரவு 7.30 மணிக்கு உலக கோப்பை பைனல் போட்டி துபாயில் நடைபெறுகிறது.
ALSO READ பைனல் போட்டியில் இருந்து விலகிய நியூஸிலாந்து அணியின் முக்கிய வீரர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR